பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 மரம் நட்டவன் அதன் கனியைப் புசித்தல் அரிது. -ஹாலந்து கூடை முழுவதையும் கவிழ்க்காமல், விதைகளைக் கையால் எடுத்து விதைக்கவும். (கவனித்து உதவிகள் செய்யவும்.) வாலில்லாத காளை மற்றக் காளைகளின் ஈக்களை விரட்டும். -ஜியார்ஜியா கிணறு வெட்டுபவன் ஒருவன்தான். ஆல்ை, அதில் நீர் குடிப்பவர் பலர். -ஆப்பிரிக்கா மனிதர்கள் குதிரைகளால் சுமந்து செல்லப்படுகின்றனர், கால் நடைகள்ால் உணவு பெறுகின்றனர். ஆடுகளிடம் உடை பெறுகின்றனர், நாய்களால் காக்கப் பெறுகின்றனர், குரங்குகளால் பின்பற்றப்பெறுகின்றனர். புழுக்களால் உண்ணப் பெறுகின்றனர். -ஹங்கேரி செருப்புள்ள காலுக்குப் பூமியெல்லாம் தோல் விரிப்பு. -இந்தியா தோட்டக்காரனுக்கு வேண்டியது மழை: - வண்னனுக்கு வேண்டியது வெய்யில்; வங்கிக்காரருக்கு வேண்டியது ஒரே பேச்சு, திருடனுக்கு வேண்டியது நிசப்தம். -இந்தியா (வங்கிக்காரர்-பாங்குக்காரர். I எப்பொழுதெல்லாம் ஒர் ஏழை மற்ருேர் ஏழைக்கு உதவி செய்கிருனே, அப்பொழுதெல்லாம் ஆண்டவர் புன்னகை செய்கிரு.ர். -இங்கிலாந்து மற்ருெருவன் உயிரைக் காப்பாற்றியவனுக்குப் பத்து ஆண்டுகள் ஆயுள் கூடும். -சீன நூறு முறை பிறருக்கு உதவி செய்பவன். ஒருமுறை தவறி விட்டால், வசைதான் கிடைக்கும். -ஜெர்மனி சிறு உதவியும் பெரும் பயனகும். -இங்கிலாந்து ஒரு தானியம் பையை நிரப்பாது,_ஆனல் அதுவும் மற்றைத் தானியங்களுக்கு உதவியாகச் சேர்கின்றது. -ஸ்பெயின் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி செய்தல் இரக்கமுள்ள செயலாகும். -லத்தீன் சொன்ன புத்தியைக் கேளாதவனுக்கு உதவிசெய்ய முடியாது, -இத்தாலி தங்களுக்குத் தாங்களே_உதவி செய்து கொள்பவர்களுக்கு இறைவனும் உதவி செய்கிருன். -இங்கிலாந்து