பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண் பு குணம் அறிந்துதான் கடவுள் கொம்பு கொடுக்கிரு.ர். -இந்தியா தன் குறைகளைக் கவனிப்பவனுக்குப் பிறர் குறைகளைப் பார்க்க நேரம் இராது. -அரேபியா ஒரு மனிதனின் பண்பு மூன்று விஷயங்களில் அறியப் பெறு கின்றது. அவனுடைய மதுக் கிண்ணம், பணப்பை, கோப்பை. -யூதர் உலகம் செழிப்பா யிருப்பதற்கு இரக்கம், கருணை. நம்பித்கை ஆகியவை காரணம். -ஆப்பிரிக்கா நல்ல நடத்தையை இழந்து மறுபடி பெறுவது கடினம். -இங்கிலாந்து நடை சுத்தமா யிருப்பதுடன், பிரகாசமாயும் இருக்க வேண்டும். -இங்கிலாந்து நமக்குள்ளேயே நாம் தெரிந்து கொள்ளாத பிரதேசங்கள் அதிகமாயுள் ளன. -இங்கிலாந்து ஒருவன் சிரித்து உதாசீனம் செய்யும் பொருள்களிலிருந்து அவன் குணம் தெரியும். -ஜெர்மனி உலகின் புயல்களின் நடுவே பண்பு வளர்க்கப் பெறுகின்றது. -கதே குணம்தான் விதி. -கிரீஸ் நமது நடத்தையின் பயன் பண்பாக அமையும். -கிரீஸ் நீண்டகாலப் பழக்கமே பண்பாகிறது. -கிரீஸ் மனிதனின் நடத்தையே அவனுடைய அதிருஷ்டத்தைத் தீர்மானிக்கிறது. -லத்தீன் உன்னைப்பற்றி என்ன நினைக்கிருர்கள் என்பது முக்கியமில்லை: நீ எப்படியிருக்கிருய் என்பதே முக்கியம், --லத்தீன்