பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கண்களே மானத்தின் உறைவிடம். -6rfధb நாணமுள்ள இடத்தில் அச்சமும் இருக்கும். -மில்டன் அவமானம் கை நீட்டிக் கேட்பவனுக்கு ஒரு கேவலம், இல்லை யென்ப வனுக்கு இரட்டிப்புக் கேவலம். -துருக்கி மிகவும் மோசமான கேவலம் வறுமைதான். -லத்தீன் நீ ஏற்றுக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், அவமானம் அவமானமே. -லத்தீன் ஆருத புண்களை மூடி வைப்பது போலி வெட்கம். -லத்தீன் மானமற்றவனுக்கு மனச் சாட்சியே யில்லை. -இங்கிலாந்து மனிதர்கள் தீயோரா யிருப்பதில் எனக்கு ஒரு போதும் வியப் பில்லை; ஆனால் அவர்கள் வெட்கமில்லாமலிருப் பதில்தான் ஆச்சரியப்படுகிறேன். -ஸ்விஃப்ட் மானம் போனபின், பெருமையும் போயிற்று. -இங்கிலாந்து நாகரிகம் நாகரிகம் என்பது மக்களை மரியாதையுள்ளவர்களாகச் செய்தல். -ரஸ்கின் நாடுதோறும் நாகரிகம் வேறு. -இங்கிலாந்து நீ நாகரிகத்தோடு ஒத்துப் போகாவிட்டால், உனக்கு மதிப்பே இல்லை. -இங்கிலாந்து அரசன் பிரபுவை உண்டாக்கலாம். ஆனல் கனவானேக் கடவுளே படைக்க வேண்டும். -இங்கிலாந்து திறமையில்லாத வெறும் கண்யம் அளவற்ற வறுமையை விட மோசமானது. -இங்கிலாந்து கனவான்கள் கடைக்குப் போனல், ஒரு படி தானியம்கூட வாங்கிவர முடியாது. -இங்கிலாந்து பணமும் பாவனைகளும் கனவானுக்குகின்றன. -இங்கிலாந்து