பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பொய் சாலையிலே வந்துவிட்டால், உண்மை மறைந்து கொள்ளும். -இந்தியா உண்மையாளனுக்குச் சாராயக் கடையிலும் இடம் கிடை யாது. -இலங்கை சத்தியத்திற்குக் கொம்புகள் உண்டு. -அரேபியா உண்மை யென்ற பாணத்தை விடுமுன், அதன் முனையைத் தேனிலே தோய்த்துக் கொள். -அரேபியா உண்மையைச் சொல்பவனுக்கு (அவன் தப்பி ஒடுவதற்கு) ஒரு குதிரையைக் கொடு. -ஆக்மீனியா நாடோடிக் குறவன் தன் வாழ்க்கையில் ஒரு முறை உண்மை யைச் சொல்விடுவான்; ஆனல் பிறகு, 'ஏன் சொன்ளுேம்? என்று வருந்துவான். -ஆங்கில நாடோடிகள் உண்மையானதாயும் இனிதாயுமுள்ளதைச் சொல்லு: உண்மை யின்றி இனிமையாக மட்டும் இருப்பதைச் சொல்ல வேண்டாம்; இனிமையின்றி உண்மையாக மட்டும் இருப்பதையும் சொல்ல வேண்டாம். -கீழ்நாடுகள் யோக்கியன் தப்பிப் பறப்பதற்குப் பொய்யே சிறகுகள். -ஆப்கானிஸ்தானம் வல்லமையுள்ளவன் (கூசாமல்) உண்மையைச் சொல்லுவான்; மூடனும் அப்படியே. -ஆப்கானிஸ்தானம் உண்மை பொன்னினும் மேலானது. -அரேபியா நன்மை விளைவிக்கும் பொய் தீமை விளைவிக்கும் உண்மையை விட மேலானது. -பாரசீகம் உண்மையான சொற்கள் நேர்த்தியா யிருக்கமாட்டா: நேர்த்தியான மொழிகள் உண்மையா யிருப்பதில்லை. . -ஸஅஃபி உண்மைக்கு உடைகள் தேவையில்லை. -அயர்லாந்து பல சமயங்களில் உண்மை அமைதியர்கப் படுத்துக் கிடக்க வேண்டும். -அமெரிக்கா உண்மையாளரின் பாஷை எப்போதும் எளிமையாகவே யிருக்கும். -செர்பியா உண்மை (உலராமல்) பச்சையாகவே யிருக்கும். -ஸ்பெயின்