பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை வெள்ளத்தில் வருவது எல்லோருக்கும் உரியது. -இந்தியா உரிமை யிருந்தால், தைரியம் வந்துவிடும். -சீன கோணி நிறைய உரிமை இருப்பதைவிட, ஒரு கை நிறைய வலிமை இருந்தால் போதும். -ஜெர்மனி விதைத்தவர்களுக்கு அறுக்க உரிமையுண்டு. -ஜெர்மனி உரிமை சட்டத்திற்கும் முந்தியது. -எஸ்டோனியா பிறர் எழுப்பக்கூடிய இடத்தில் நீ அமரவேண்டும். -கிரீஸ் பிறந்தால் அரசகைப் பிறக்கவேண்டும், அல்லது மூடய்ைப் பிறக்க வேண்டும். (எல்லையற்ற உரிமை கிடைக்கும்) -லத்தீன் எந்த மனிதனுக்கும் தன் உரிமைகள் அனைத்திலும் உரிமை டையாது. -அமெரிக்கா கீழே நிலமுள்ளவனுக்கு அந்நிலத்திற்கு மேலே வானம்வரை சொந்தம். -லத்தீன் சொந்த நாற்காலியில்தான் ஒருவன் சுகமாக உட்கார முடியும் -அமெரிக்கா கோ. ப ம் இன்சொல் வெகுளியை மாற்றும், ஆளுல், கடுஞ் சொற்கள் வெகுளியைக் கிளப்பும். -பழைய ஏற்பாடு சூரியன் சாயுமுன் உன் கோபத்தை ஆற்றிக்கொள். -புதிய ஏற்பாடு ஆற்றலில்லாத கோபம் அசட்டுத்தனம். -ஜெர்மனி ஈக்குக்கூட வெகுளி உண்டு. -லத்தீன் வெகுளியுள்ள மனிதன் வெறிபிடித்த குதிரைமேல் சவாரி கோபமுள்ளவர்கள் சோகத்தைத் தேடவேண்டியதில்லை. -இங்கிலாந்து