பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33% பொறுமை சயித்தானை விழுங்கிவிடும். -ஜெர்மனி பொறுத்தவனுக்கே உலகம். -இத்தாலி அடிக்கடி சோதிக்கப்பெற்ற பொறுமை கோபமாக மாறும். -லத்தீன் பொறுமையில்லாதவனிடம் தத்துவ ஞானமும் இருப்பதில்லை. -ஸாஅதி பொறுமை வானுலகின் திறவுகோல். -ஸாஅதி தீமையின் வழியாகச் செல்லாமல், நீ நன்மையை அநுபவிக்க முடியாது. -யூதர் நா வட க் க ம் காலம் போகும் வார்த்தை நிற்கும். -தமிழ்நாடு நாவைக் கொண்டு யானை ஏறலாம்; நாவாலேயே நம் தலையை யும் இழக்கலாம். -இந்தியா நாவுக்கு எலும்பில்லாததால், அது எதையும் பேசும்.-( ' ) கோபம் மூள்வதும் ஒரு சொல்லாலே, அன்பு பெருகுவதும் ஒரு சொல்லாலே. -இந்தியா நாவால் அடிபடுவதைவிட, காலால் உதைக்கப்படுவது மேல்-ஃபிரான்ஸ் வாயைக் காப்பவன், தன் வாழ்வைக் காத்துக் கொள்கிறன் . -சுவீடன் காலம் செய்ததையெல்லாம் வீணுக்கும், நாவு செய்ய வேண்டியதையெல்லாம் வீனக்கும். -பெல்ஜியம் எளிதில் இசைந்துவிடுபவன் தன் சொல்லைக் காப்பாற்றுவது அரிது. = -சீன ஏராளமான சொற்களில் பிழையிருப்பது நிச்சயம். -சீன சொற்கள் இதயத்தின் குரல். -சீன செத்த மொழிகள் நூறு காட்டுவதைவிட, உயிருள்ள ஒரு சொல் மேல். -ஹாலந்து ஒவ்வொரு சொல்லாகச் சேர்ந்து நூல் உருவாகின்றது. -ஃபிரான்ஸ்