பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 எல்லாவற்றையும் சீர்திருத்த விரும்புபவன் எல்லாவற்றையும் தலைகீழாகக் கவிழ்ந்து விடுவான். -ஜெர்மனி ஒரு நல்ல விஷயத்தில் தலை கிறங்கி மகிழவும் வேண்டாம்: இரண்டு கெட்ட விஷயங்களைக் கண்டு கதிகலங்கவும் வேண்டாம். -ஃபின்லந்து பிள்ளை பிறந்த பிறகுதான் பெயரிட வேண்டும். -ரஷ்யா காடு முழுவதையும் வெட்ட வேண்டாம், வீட்டிற்கு விறகு இல்லாமலும் போக வேண்டாம். -ஸெர்பியா முன்னல் பாராதவன் பின்னல் தள்ளப்படுவான். —(?” ) இ ைடயூறு இடுக்கண் தாக்கும்போது கொல்லனைப் போல, அடித்து உருவாக்கவும் செய்கின்றது. -இங்கிலாந்து இடுக்கண் என்பது (நம்) பண்புக்குச் சோதனை. -இங்கிலாந்து மனிதர்கள் மலைதடுக்கி லிழுவதில்லை; சிறு கற்கள் தடுக்கியே விழுகின்றனர். -இந்தியா நீண்டிருக்கும் கட்டை தலையில் தட்டும் . -ஜப்பான் எல்லாவற்றையும் எளிதாகக் கருதுபவனுக்குக் கஷ்டங்கள் பெருகும். -சீன எல்லா விஷயங்களும் எளிதாவதற்கு முன் சிரமமாகத் தானிருக்கும். -இங்கிலாந்து மன உறுதியுள்ளவனுக்கு எதுவும் கஷ்டமில்லை. —( "" ) மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் காட்டுவது கஷ்டங்களே. -கிரீஸ் மிகச் சிறந்த விஷயங்கள் மிகக் கடினமானவை. -கிரிஸ் சாதுரிய ம் காதைப் பிடித்து இழுத்தால் தலை தாகை வரும். --இந்தியா அதிகச் சாதுரியம் காட்ட வேண்டாம்: உன்னைவிடச் சாமர்த்தியசாலிகள் சிறையிலே யிருக்கின்றனர். -ரஷ்யா