பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சிறிய பானை சிக்கிரம் கொதிக்கும். -இந்தியா பருத்தி, எண்ணெய், நெருப்பு-இவற்றின் உதவியால் மாரிக் காலத்தை வெல்ல முடியும். -இந்தியா முள்ளைக்கொண்டு முள்ளை எடு. -தமிழ்நாடு சொந்த வண்டியானலும், மை இல்லாமல் ஓடாது. -இந்தியா வீரம் என்பது பத்து என்ருல், அதில் ஒன்பது தந்திரமாகும். -துருக்கி நரி பிடிக்க வரும்பொழுதுதான் அதைப் பிடிக்கவேண்டும். o -இங்கிலாந்து ஓடுகிறவனுக்கு ஒரு பாதை, பிடிக்கிறவர்களுக்கு - நூறு பாதைகள். -பல்கேரியா கல்லைத் துரக்க முடியாதவன் அதை உருட்ட வேண்டும். -எஸ்டோனியா யஜமான் தயவு வேண்டுமானல், அவருடைய நாய்களுக்கும் உணவு வை. -ஃபின்லந்து உன் உடைவாள் கட்டையா யிருந்தால், நீ ஒர் அடி முன்ல்ை நகர்வதில் அது நீண்டு விடும். -ஹங்கேரி உன்னல் அடிக்க முடியாத கையை முத்தமிடு. -ருமேனியா பால் கறக்கு முன்பு பசுவைத் தட்டிக் கொடு. -ஆப்பிரிக்கா -94 (15 sud LD ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை. -தமிழ்நாடு சதுரமான முட்டையும், உண்மையுள்ள வேசியும் அரியவை. -ஜப்பான் ரோஜா தோட்டத்தில் ரோஜா மலரின் அருமை தெரியாது. -ஜெர்மனி வெகு துாரத்திலிருந்து வந்ததானல், அது நல்ல மீன்தான், -ஃபின் லந்து நல்லது போனல் தெரியும், செட்டது வந்தால் தெரியும். -இத்தாலி