பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 இதயமே கால்களை இழுத்துச் செல்கின்றது. -யூதர் இதயமே உடலைத் தாங்குகின்றது. -ஸ்பெயின் இதயம் கசப்பா யிருக்கும்பொழுது, வாயில் சீனியும் கசக்கும். . - -பூதா உணர்ச்சி சுவர் மறைவில் நிற்பவன் வேறு எதையும் காணமுடியாது, (உண்ர்ச்சி வசப்பட்டவன் எதையும் தெளிவாகக் காண முடியாது.) -ஜப்பான் வீரம் வீரனுக்கு எந்த நிலமும் தன் நாடுதான். -இத்தாலி எதிரிகள் ஒடிவிட்டால், எல்லோரும் வீரர்களே. -இத்தாலி இதயமில்லாதவனுக்குக் கால்களே பயன்படும் -இத்தாலி அபாயத்தில் காட்டும் வீரமே போரில் பாதியாகும். -லத்தீன் மூர்க்கமான விலங்குகளும், அடைத்து வைத்தால், வீரத்தை மறந்து விடுகின்றன. -லத்தீன் அதிருஷ்டம் வீரர் பக்கமே நிற்கும். -லத்தீன் வீரர்கள் வீரர்களுக்குப் பிறந்தவர்கள். -லத்தீன் வீரனுடைய வாக்கு இரும்புக் கவசமாகும். -துருக்கி வீரனைப் போர்க்களத்திலே அறிய வேண்டும், -துருக்கி புலிக்குட்டிகள் வேண்டுமானல், புலியின் குகைக்குள் நுழையா மல் முடியாது. -சீன வீரமுள்ள மனிதனுக்கு ஆயுதங்கள் தேவையில்லை. -இங்கிலாந்து வீரத்திற்கு கைகளைப் போலவே கண்களும் இருக்க வேண்டும். -இங்கிலாந்து கோழை உள்ளம் அழகிய பெண்ணைக் கவர்ந்ததில்லை. -( ')