பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஒருவன் தன் மதிப்பைப் பற்றி, மேலும் மேலும் உரக்கப் பேசியதும், நாங்கள் எங்க்ள் கரண்டிகளை எண்ணிச் சரி பார்த்துக் கொண்டோம். (அவ்வளவு கெளரவ முள்ளவன் உணவு உண்ணும் கரண்டிகளையும் திருடிக் கொண்டு போவான் என்று பயம்.) -எமர்ஸன் ஒரு கெளரவம் அடைந்தால், அது மேலும் பெருமைக்கு அடிப்படையாகும். -ஃபிரான்ஸ் மானமில்லாத இடத்தில் மதிப்பில்லை. -ஜெர்மனி கெளரவமுள்ள மனிதர்களிடையே ஒரு சொல்லே உறுதிப் பத்திரமாகும். -இத்தாலி புருவை அடக்குதல் கழுகுக்குக் கெளரவம் ஆகாது.-இத்தாலி கெளரவம் (மனிதனின்) பழக்கங்களை மாற்றிவிடும். -லத்தீன் பெருமைகளைத் தேடி ஒடவேண்டாம். அவை தாமாகவே உன்னைத் தேடி வரும். -யூதர் அகெளரவத்தை விட்டு ஓடவேண்டும், ஆனால், கெளரவங்களே நாடி ஒட வேண்டாம். -யூதர் நரி நரியைத் தூதனுப்பும், சிங்கம் சிங்ககத்தைத் தாதனுப்பும். -ஆப்பிரிக்கா எளிதாக வந்த பொருளுக்குச் சரியான கவனிப்பு இராது. -- -ஜெர்மனி நல்ல பொருளை விலை குறைத்துக் கேட்பார்கள்:_கெட்ட பொருளைக் கூடுதலாகக் கேட்பார்கள். -ஜெர்மனி தானக வந்தது நொண்டியா யிருக்கும். -ஜெர்மனி வலுவில் வந்தவள் கிழவி. -தமிழ்நாடு செல்வங்களை விடச் செல்வாக்கு மேலானது. -அயர்லந்து ஏழையின் ரூபாய்க்கு ஒர் அணு மதிப்புத்தான். -ஸ்வீடன் நான் யார் என்று கேளுங்கள். நான் எவர் மகன் என்று கேட்க வேண்டாம். - ரஷ்யா ஒரு ரூபாயின் மதிப்புத்_தெரிய வேண்டுமானல், யாரிடமாவது அதைக் கடனுகக் கேட்டுப் பார். -இத்தாலி