பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315, உண்டு ருசி கண்டவனும், பெண்டு ருசி கண்டவனும் விடான். -தமிழ்நாடு வயிறு நிறைந்துள்ளபோது உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி தோண்டிக் கொள்கிருன். -துருக்கி இன்றைக்கு அமிதமான உணவு. நாளை பட்டினி, -அமெரிக்கா ് ബ ബ மிட்டாய்க் கடையிலிருந்து ஈ வெளியேறது. -இந்தியா தேன் சிந்திய இடத்தில் ஈக்கள் கூடியிருக்கும். -இந்தியா உருசி பார்ப்பதற்கு முழுக்கோழியையும் விழுங்க வேண்டிய தில்லை. -சீன உருசி பார்க்குமுன் ஆசையிருப்பது இயல்பு: ஆல்ை உருசி கண்டவனுக்கோ, நூறு மடங்கு ஆசை பெருகிவிடும். -பாரசீகம் பசி கெட்டுப் போகாமலிக்க வேண்டுமானல், ஒருவன் சமைய லறைக்குள் போகக்கூடாது. -ஜெர்மனி புளித்த பழத்தைத் தின்றவனுக்கு நல்ல பழம் அதிக இனிப் பாயிருக்கும். -ஜெர்மனி சமையற் காரனுக்கு முதலாளியின் உருசி தெரிந்திருக்க வேண்டும். -இத்தாலி உ . வாச ம் இலங்கணம் பரம ஒளடதம். -தமிழ்நாடு ச ைம ய ல் தாளிக வாடை வெகு துரம், கருகின வாடை அதற்கப்பர்லும் வீசும். -ஸெக் 2-601 உடைகளே மனிதர் -எகிப்து