பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 ஆள்பாதி, ஆடை பாதி. -தமிழ்நாடு உடையைக் கொண்டு மனிதனை மதிப்பர். -ஹலந்து உன் நாட்டில் உன் பெயரைக் கேட்பார்கள், வெளி நாடுகளில் உன் உடையைப் பார்ப்பார்கள். -யூதர் பெண்கள் உடையணிந்தும் நிர்வாணமாய்ப் போவதற்காக பட்டு கண்டுபிடிக்கப் பெற்றது. -அரேபியா உணவு உண்பது உன் இன்பத்திற்கு, உடையணிவது மற்றவர் இன்பத்திற்கு. -இங்கிலாந்து நல்ல உடைக்கு நல்ல வரவேற்பு. -இங்கிலாந்து எவனுடைய உடையை எவரும் கவனிப்பதில்லையோ, அவன் உடையே சிறந்த உடை. -இங்கிலாந்து மனிதனைத் தையற்காரன் தயாரிக்கிருன். -இங்கிலாந்து உடையில்லாதவர்கள் காட்டிலும் உறங்காலம். -இந்தியா ஆளின் திறமை பத்தில் மூன்று பங்கு, ஆடை பத்தில் ஏழு பங்கு. -சீன ஆளை மதிப்பது உடைகளால், குதிரையை மதிப்பது சேணத்தால். -சீன гъп (Б) படகைக் காப்பது நாட்டின் கொடி. -ஃபிரான்ஸ் ஒவ்வொரு நாடும் தாய்நாடுதான். டகிரீஸ் தாய்நாட்டிற்காக மடிவது உயர்வு. அதைவிட உயர்வு தாய் நாட்டிற்காக உயிர் வாழ்தல். -ஹங்கேரி ஒருவன் பிறந்த இடத்தில் புல்லும் மகிழ்ச்சி தரும். -இத்தாலி என் கைகளையும் கால்களையும் கட்டினலும், என்னை என் மக்களுள்ள இடத்தில் தள்ளி விடுங்கள் -லத்தீன் ஒருவர் நாட்டில் அந்நியர்கள் குடிபுகுவதைப் போன்ற தீமை வேறில்லை. -ருமேனியா வேற்ருனின் இரக்கம் முள்ளின் நிழல் போன்றது. -ருமேனிய"