பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இயற்கை ஒரு நூல்: ஆண்டவரே அதன் ஆசிரியர். H -இங்கிலாந்து இயற்கையின் விதிகளுக்கு விதிவிலக்கு இல்லை. -இங்கிலாந்து மனிதன் இல்லாத இடத்தில் இயற்கை கட்டாந்தரை. -பிளேக் இயற்கையை வெருட்டில்ை, அது விரைவில் திரும்ப வந்து விடும். -ஃபிரான்ஸ் இயற்கைக்கு மாறுபட்டது அனைத்தும் அரைகுறை Ш/TCUTCN) 6]]. -ஃபிரான்ஸ் கல்வியைவிட இயற்கைக்கு எப்பொழுதும் ஆற்றல் அதிகம். -ஃபிரான்ஸ் இயற்கையின் உண்மை சுரங்கங்களிலும் குகைகளிலும் மறைந்து கிடக்கின்றது. -கிரீஸ் இயற்கையானது எதுவும் இழிவானதன்று - கிரீஸ் இயற்கையை மாற்றுவது கடினம். -லத்தீன் இயற்கை எந்த இடத்தையும் காலியாக (வெறுமையாக) விட விரும்புவதில்லை. -லத்தீன் இயற்கை எதையும் வீனகச் செய்வதில்லை. -லத்தீன் இயற்கை இறைவனின் கலை. -லத்தீன் வழக்கம் இயற்கையை ஒருபோதும் வெல்ல முடியாது.-லத்தீன் பூமி ஒன்றுதான் மனிதனின் நண்பன். -பல்கேரியா ஆதாம் காலத்திலிருந்தே கழுதை சாம்பல் நிறம்தான். -ஸெக் சின்னஞ்சிறு தேனீக்களே ஏழைகளின் குட்டிப் பசுக்கள் -ஸெக் வனத்திற்கு ஒருநாள் செல்பவன் ஒரு வாரத்திற்கு வேண்டிய உன்னவுட்ன் செல்லவேண்டும். -லெக் பூனை வயிற்றில் எது பிறந்தாலும், அது எலி பிடிக்கும். -ஸெக்