பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பட்டுச் சட்டையிலும் சீலைப்பேன் இருக்கும். -எஸ்டோனியா பூனை மீனை வாலிலிருந்துதான் கடித்துத் தின்னும். ( .. ) பூனேயைத் தடவத் தடவ அது வாலை அதிகமாய்த் துாக்கும். -எஸ்டோனியா எந்த நிறம் சேர்ந்தாலும், கறுப்புநிறம் மாருது.-இங்கிலாந்து கரை - கண்ணுக்குத் தெரிந்துவிட்டதால், நாயும் பூனையும் நீருள் ஆழ்ந்துவிட மாட்டா. -இங்கிலாந்து மூடுபனியை விசிறியால் விரட்ட முடியாது. -இங்கிலாந்து பூனையிடம் பூனையையே எதிர்பார்க்கலாம். -இங்கிலாந்து பூனையின் மகன் எலியைக் கொல்வதைத்தவிர வேறென்ன செய்வான்? -இங்கிலாந்து மாலை வருகையில் எல்லோரையும் வீடுகளுக்கு அழைத்து வருகின்றது. ■ -ஸ்காட்லந்து எல்லா விறகிலிருந்தும் புகை வரும். -கிரீஸ் பல் இருந்தால் தவளையும் கடிக்கும். -இத்தாலி (மனிதன் முறையாகவே நடக்க முடியும்.) பின்புறமாக நடக்க முடியாது. -லத்தீன் பெண்சிங்கம் ஒரு குட்டிதான் போடும். ஆல்ை, அது சிங்கக் குட்டி! -அமெரிக்கா இந்த உலகில் எல்லாம் இரண்டு இரண்டாக உள்ளன. -அமெரிக்கா செயற்கையான கொம்புகள் பொருந்தி நிற்கமாட்டா. -அமெரிக்கா குட்டை இருந்தால், தவளைகளும் இருக்கும். -ரவி; யா காய் கனிந்தால், தானக விழும். -செர்பியா சந்திறனும் வெளிச்சமாயிருக்கிறது. ஆனல் அது சூடளிப்ப தில்லை. -ரவி:யா பூமியைப் போல் உனக்குச் செல்வம் பொங்குவதாக! -ரஷ்யா