பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 எறும்பும் எறும்புடன் பேசும். -ரவியா உருகாத மெழுகு கிடையாது. -ஸ்பெயின் பல ஈக்கள் சேர்ந்து ஒரு கழுதையைக் கொன்றுவிடும். -ஸ்பெயின் நண்டின் வயிற்றில் பறவை பிறக்காது. -எகிப்து உ யி ர் மூச்சு என்பது உயிரின் இசை. -இந்தியா மனித ன் பல்லக்கில் இருப்பவன் மனிதன், பல்லக்குத் துரக்குபவனும் மனிதன்தான். -சீன உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி. -ஆர்மீனியா உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி. -ஆர்மீனியா ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும். ஒரு மகனே யாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதி யிருக்க வேண்டும். -இதாலி மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை. -லத்தின் நீ கடலுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் ஒர் ஆறு. =- -லத்தீன் மனிதன் நடமாடும் பிணம். -ரவியா ஒருவன் பூரண மனிதகை விளங்க வேண்டுமானல், அவன் பொதுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும், பல்கலைக் கழகத்தில் ஒராண்டும், சிறையில் இரண்டாண்டுகளும் கழித்திருக்க வேண்டும். -ரவியா ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே, -ஸ்பெயின்