பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மெலிந்தவனே அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை. -ஆப்பிரிக்கா மனிதன் தானே தனக்குச் சயித்தான். -இந்தியா மலை இடம் பெயர்ந்துவிட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனல் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம். -அரேபியா மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிருர்கள். -அரேபியா மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கிறது: சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது. -கன்ஃபூவியஸ் மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன் -ஹாலந்து வெட்கம் மனிதனை விட்டு விலகி நின்ருல், அவன் விலங்கா மேலான rrofr. -சுவின்பர்ன்והי தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன் -இங்கிலாந்து மனிதன் இயற்கையில் ஒர் அற்புதம். -இங்கிலாந்து மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே. ( * } ரிெக்கும் மிருகம் மனிதன் ஒருவன்தான். -இங்கிலாந்து வெட்கப்படும் விலங்கு மனிதன் ஒருவனே. -மார்க் ட்வெயின் மனிதர்களுக்கு மனம் பளிங்கு, பெண்களுக்கு மனம் மெழுகு, -ஷேக்ஸ்பியர் இரக்கமற்ற தன்மையைக் காட்டிலும் மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை. -ஸ்பென்ஸர் புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம். -ஃபிரான்ஸ் மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிருன்: -ஜெர்மனி மிருகத்தையும் அதிமானிடனையும் பிணைத்துக் கட்டும் கழிறு மனிதன். -நீட்ஷே.