பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பெண்புத்தி பின்புத்தி. -தமிழ்நாடு வயது வந்த பெண் (தீர்வை கட்டாமல்) கடத்தி வந்த உப்பைப் போன்றவள். -சீன (விரைவிலே வெளியேற்ற வேண்டும்.) பெண்ணின் உரோமத்தால் பெரிய யானையையும் கட்டிப் பிடிக்கலாம். -சீன இளமங்கையை வீட்டில் புலிபோல் காத்துவர வேண்டும்.-சீன ஆடவர்கள் இதயங்களால் சிரிப்பார்கள், பெண்கள் உதடு களால் மட்டும் சிரிப்பார்கள். -அரேபியா பெண்பிள்ளை பயணம் போகிருள் என்ருல், ஒர் ஆண்பிள்ளை அவளுக்குக் கதவைத் திறப்பதுதான் காரணம். -

  • -அரேபியா

ஒரு நல்ல பெண் ஏழு பிள்ளைகளுக்கு மேல். -ஆர்மீனியா உனக்கு ஒர் இரகசியம் தெரியவேண்டுமா? ஒரு குழந்தை, பயித்தியக்காரன், குடிகாரன், அல்லது ஒரு பென்னிட்ம் கேட்டுப் பார். -ஆர்மீனியா ஆணைவிடப் பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு அதிகம். -பர்மா பெண்களை அழவிடுவதில் மனிதர்கள் கவனமா யிருக்க வேண்டும்; ஏனெனில் ஆண்டவன் அவர்களுடைய கண்ணிர்த் துளிகளை எண்ணிப் பார்க்கிருன். -யூதர் கழுதை ஏணிமேல் ஏறும்பொழுது, பெண்களிடம் நாம் ஞானத்தைக் காணலாம். -யூதர் பெண்ணுக்குக் கூந்தல்தான் நீளம், மூளை கட்டை. -கால்மிக் பெண் முற்றிலும் ஆணின் உடைமையாகாள். -குர்திஸ்தானம் மன்னன், மாது, குதிரை-மூன்றையும் நம்பவேண்டாம். -பாரசீகம் பெண்ணுல் துயரமே வரும், ஆயினும் பெண் இல்லாத விடே இருக்க முடியாது. -பாரசீகம் இரண்டு பெண்களும் ஒரு வாத்தும் இருந்தால் போதும்அது ஒரு சந்தையாகி விடும். -பாரசீகம்