பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ன வ ன் கணவனின் அன்பே மனைவியின் வாழ்க்கை. -ஜெர்மனி தோட்டத்தின் நன்மை வேலி; வீட்டின் நன்மை குடியிருப்பு: பெண்ணின் நன்மை கணவன். -மலாய் மனையாளின் குற்றங்களுக்கு மணவாளனே பொறுப்பு: குரங்கு வளர்ப்பவன் அதன் சேட்டைகளுக்குப் பொறுப்பாளி. -இங்கிலாந்து ஒடுக்கமான வீட்டில் விகாரமான மனைவியை உடையவனுக்கு கவலையேயில்லை. -இங்கிலாந்து அதிருஷ்டமுள்ளவன் மனைவியை இழக்கிருன்; அதிருஷ்ட மில்லாதவன் குதிரையை இழக்கிருன். -ஜியார்ஜியா மனைவி செய்யும் பாவங்களுக்குக் கணவனும் உடந்தைதான். -லத்தீன் கணவன் என்பவன் தன் மனைவியின் தந்தை. -ரஷ்யா ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது. I -ருமேனியா ஏழு வருடங்கள் கழியுமுன்னல் உன் மனைவியைப் புகழாதே. - -ரஷ்யா அதிருஷ்டத்தில் உயர்ந்தது நல்ல கணவன் வாய்ப்பது: அடுத்தது நல்ல வேலைக்காரன் வாய்ப்பது. -செர்பியா மனிதனுக்குச் சந்தோஷம் இரு தடவைகள் வரும்; ஒன்று மனைவியை அடையும் பொழுது; மற்றது அவளைப் புதைக்கும் பொழுது. = -செர்பியா அடுப்படியிலே அடைகாக்கும் கணவன் விலாப்பக்கத்து வலி போன்றவன். -ஸ்பெயின் உன் மனைவி உன்னை ஒரு கூரையிலிருந்து குதிக்கச் சொன்னல், "கடவுளே, அது தணிந்த கூரையா யிருக்கட்டும்!" என்று பிரரர்த்தனை செய்து கொள். -ஸ்பெயின் மனிதனின் தலை, பெண் தொப்பி. -சுவீடன்