பக்கம்:உலகப் பழமொழிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒண்டியிருக்க முடிந்தது; பின்னல் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந் திருக்க முடியவில்லை. -எஸ்டோனியா வீட்டுக்குத் தேவையானவை நான்கு: தானியம், சேவல், பூனை, மனைவி. -இத்தாலி கணவன் குடித்தால் பாதி வீடு எரியும், மனைவியும் குடித்தால் முழு வீடும் எரியும். -ரஷ்யா தன் வீட்டுக்கு வெளியிலே இன்பத்தை நாடுவோன் தனது நிழலையே துரத்திக்கொண்டு திரிகிருன். ー( “” ) உன் சொந்த வீட்டில் சுவர்கள் கூட உனக்கு உதவியாயிருக்கும். -ரவியா என்னை என் குடும்பத்திலிருந்து காப்பாற்றுங்கள்; என் எதிரிகளை நானே பார்த்துக் கொள்கிறேன். -செர்பியா தரையை வைத்து வீடு கட்டப் பெறுவதில்லை. ஒரு பெண்ணை வைத்தே கட்டப் பெறுகின்றது. -செர்பியா வீட்டில் கடிகாரமே யசமானரா யிருக்க வேண்டும். -சுவீடன் வீட்டுத் தலை வன்மீது வீட்டிலுள்ள எல்லோருடைய குப்பை களும் கொட்டப்படும். -ஆப்பிரிக்கா பெண்தான் இல்லம். -ஆப்பிரிக்கா பெண்பிள்ளைகள் இரண்டு வார்த்தைகள் சொன்னல், ஒன்றை எடுத்துக்கொண்டு, மற்றதை விட்டுவிடு. -ஆப்பிரிக்கா சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக் இன்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றது. -டால்ஸ்டாய் கடவுள் நமக்கு உறவினரைக் கொடுத்திருக்கிருர்; ஆல்ை அன்பர்களை மட்டும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். -இங்கிலாந்து அவசியமான பொருள்கள் நிறைந்த ஒரு வீடு, நன்முக உழுத ஒரு சிறு நிலம், நல்ல சிந்தனையுள்ள ஒரு மனைவி -மூன்றுமே இன்ப வாழ்வளிக்கும். -இங்கிலாந்து