பக்கம்:உலகமும் உயிர்களும் உண்டான வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 எல்லைக்குள் வந்த விழுகின்றன. இவை மிகவும் விரை வாக இயங்குவதால் பூமியின் காற்றுப் படலத்தோடு மோதி வெப்பம் மிகுந்து எரிந்து போகின்றன. சில எரிந்து சாம்பல் ஆகிப் பூமியின் மேற்பர்ப்பில் படிவ துண்டு. சில எரிந்தும் எரியாமலும் பூமியின் மேல் விழுந்து பெரிய பாறைகளாகத் தோன்றுவதும் உண்டு. இந்தப் பாறைகளுக்குக் காந்த (Magnetic) ஆற்றல் உண்டு. ஒரு முறை மெக்சிகோ நாட்டில் விழுந்த பாறை சுமார் 50 (ஐம்பது) டன் எடை உடையதாய் இருந்த தாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய பாறைகளில், நிக்கல், இரும்பு முதலிய-தாதுப் பொருள்கள் இருப்ப தாகச் சோதனையின் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. இதனால் எரிவிண்மீன்களும் பூமியும் ஒத்த தாதுப் பொருள்களை உடையன என்னும் செய்தி பெறப்படு கிறது. பூமியில் உள்ளனவே எரி விண்மீன்களின் பாறை களிலும் உள்ளமையைக் கொண்டு, அண்ட வெளியில் இயங்கும் அனைத்துக் கோளங்களுமே ஒத்த மூலப் பொருள்களை உடையன என உய்த் துணரலாம். உணரவே, கோளங்கள் அனைத்தும் ஒத்த பரிணாம நிலை உடையன என்னும் முடிபு தன்னில் தானே கிடைக்கும். - - - மாயா பிரபஞ்சம் : * - - - கோளங்க்ள் அனைத்தும் ஒத்த பரிணாம நிலை உடையன எனில், மாப்பேருவ காகிய பிரபஞ்சம் முழுவ தற்கும் மூலப் பொருள் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பது பெறப்படும். மாயா பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை’ என்னும்-நாடகப் பாடல் ஒன்றினைப் பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட நினைவு உள்ளது. பிரபஞ்சம் மாயா காரியம் (மாயையால் ஆனது) என்பது ஒரு கொள்கை. மாயை (மாயா) என்பது அழியக் கூடியது என்றும், அது ஒரு பெர்ய்த் தோற்றம் என்றும் சிலர் 63 கூறுவர். மற்றும், மாயை அனாதி என்று கூறுவதும் உண்டு. ஆதி என்றால் ஒரு காலத்தில் தோன்றியது - தோன்றிய காலம் தெரியக் கூடியது என்பது பொருள். அனாதி என்பது ஆதி என்பதற்கு எதிர் மறையாகும்: அஃதாவது, - இன்ன காலத்தில் தோன்றியது என்று கூற முடியாத அளவுக்கு மிகவும் பழமையானது - உலகத் தொடக்கக் காலத்திலேயே உள்ளது அனாதியாகும். இவ்வாறாக, மாயை என்பது பற்றிப் பலரும் பல கருத் துக்கள் கூறிக் குழப்புகின்றனர்; தெளிவே கிடையாது. மாணிக்க வாசகர் திருவாசகம் என்னும் நூலில் போற்றித் திருவகவல் என்னும் பகுதியில்,_ --> ஆறு கோடி மாயா சக்திகள் - வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர் மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் கழித்தடித் தாஅர்த்து' என்றெல்லாம் கூறியுள்ளார். “ஆறு கோடி மாயா சக்திகள் என்பது, எண்ணற்ற மாயா சக்திகள் என்ப த்ாகும். மாயையை-மையமாக வைத்து-வாதிடுகின்ற மாயாவாதக் கொள்கையை, சண்ட மாருதமாகிய சூறாவளிக் காறறு என்று உருவகம் செய்துள்ளார். "இவை வெறும் மாயை, இவற்றில் மயங்கக்கூடாது” என்று தத்துவவாதிகள் கூறுவதன் பொருளாவது :இந்த உலகப் பொருள்கள் - உலக இன்பங்கள் யாவும் நிலையற்றவை; எனவே, இவற்றை உண்மையென நம்பி மயங்கி இவற்றிலேயே ஈடுபட்டு வீழ்ந்து மாய்ந்து போகக் கூடாது- என்பது-பொருளாகும்.