பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71

களையும் 'கார்போனிவரஸ்' சகாப்தம் என்று அழைப்பது உண்டு. அதாவது நிலக்கரி சகாப்தம் என்று பொருள்.

நிலக்கரி சகாப்தம் முடிகிறது. பெர்மிய சகாப்தம் தொடங்குகிறது.

முன்பு, கடலுக்குப் போய் வந்த உயிர் இனங்களின் பிறந்த வீட்டு ஆசை இப்போது முற்றும் போய்விட்டது. இவை கடலைப் புறக்கணித்துவிட்டன. சதுப்பு நிலத்திலே விழுந்து கிடக்கும் மரங்களின் இலைகளைத் தின்று வயிறு புடைக்கின்றன. பஞ்சமே இல்லை, போட்டியில்லை. பயம் இல்லை. ஆனந்தமான வாழ்க்கை.

ஆகவே, இந்த ஓணான் இனம் எருமை போல் சேற்றிலே புரண்டு, தழைகளைத் தின்று, சோம்பேறிகளாக இருப்பதில் ஆச்சரியம் ஏது?

இவ்விதமாக பழைய ஜீவயுகம் முடிவடைகிறது. நாடகத்தின் முதல் காட்சி முடிகிறது. மொத்தம் முப்பத்து மூன்று கோடி ஆண்டுகள் ஓடிவிட்டன.

இனி, இந்தச் சோம்பேறி ஓணான் பெரிய பெரிய இனமாகி அசுர ஜீவன்களாகி, பூமியை