பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17. நமக்கு முன்பு

சமீப ஜீவ யுகமானது சுமார் ஆறு கோடி ஆண்டுகள் முன்பு தொடங்கிற்று. அப்போது பெரியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் நிலத்தைக் கடல் கொண்டது. வேறு சில இடங்களில் கடல் விலகிப் போயிற்று; நிலம் தோன்றியது. திதியன் கடல் இருந்த இடத்திலே இமயமலை தோன்றியது. ஆல்ப்ஸ் மலையும் தோன்றியது. இன்றைய தினம் நாம் காணும் பூகோள அமைப்பு அன்று ஏற்பட்டதே

பூமி தேவியானவள் மிக்க எழில் பெற்று விளங்கினாள். எங்கு நோக்கினும் மரங்கள்.

செடிகள்! கொடிகள்! மரகதப் பாய் விரித்தது போன்ற பசும் புல் தரைகள் காணப்பட்டன. கருக் கொண்ட காரிகை போல் கவின் பெற்று விளங்கினாள் நில மடந்தை. உண்மை! உண்மை! புதியதொரு சகாப்தத்துக்குரிய உயிர் இனங்களைக் கருக் கொண்டு இருந்தாள் அவள். அதற்கு அறிகுறியாக செடிகள், கொடிகள், மரங்கள்