பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91

1665ம் ஆன்டிலே ஒருநாள் அவர் தமது ரசாயன சாலையில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தார். பூதக் கண்ணாடி என்று சொல்கிற மைக்ராஸ்கோப் மூலம் பல்வேறு பொருள்களை ஆராய்ந்துகொண்டு இருந்தார். அப்போது அங்கே ஒரு துண்டு 'கார்க்' கிடந்தது.

கார்க் என்றால் நெட்டி என்று பொருள். அதை எடுத்துப் பூதக் கண்ணாடியில் வைத்து ஆராய்ந்தார். என்ன ஆச்சரியம்! அந்த நெட்டித் துண்டிலே ஏராளமான அறைகள் காணப்பட்டன. சின்னஞ் சிறு அறைகள்! அதைப் பார்த்த உடனே ஹூக் என்ன நினைத்தார்? கிறிஸ்தவப் பாதிரிமாரின் படங்களை நினைத்தார். அந்தக் காலத்திலே கிறிஸ்தவப் பாதிரிமாரின் மடங்களிலே சின்னச் சிறு அறைகள் உண்டு; ஏராளமாக உண்டு. அவற்றிற்கு ‘ஸெல்' என்று பெயர். சாமியார்களுக்கு என்று ஏற்பட்டவை அவை.

அம்மாதிரி 'ஸெல்'கள் நெட்டியிலும் இருக்கக் கண்டார் ஹூக், ஆனால் அவர் கண்டது உயிர் உள்ள 'லெஸ்' அல்ல. உயிரற்ற செல்.