பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 உலகைத் திருத்திய

என்மேல் என் நண்பர் மெலிடஸ் அவர்கள் சுமத்திய குற்றங்களில் முதன்மையானது, நான் சாமர்த்தியமான பேச்சாளி என்பது. அதுதான் அவர் சொல்லிய பொய்களில் மிகப் பெரிய பொய்யாகும். நல்ல பேச்சாளி என்று குறிப்பிடுவது, உண்மை பேசுவதையே குறிக்கும் என்றால் அதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இரண்டாவதாக என் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் நான் ஆகாயத்தைப் பற்றியும், நிலத்தின் அடிவாரத்தைப் பற்றியும் ஆராய்வதால் நான் கடவுள் நம்பிக்கை ஆற்றவன் என்பது. தனக்கு விருப்பமான ஒன்றில் உள்ளத்தைச் செலுத்தி உண்மையைக் கண்டுபிடிக்க விரும்புகின்ற ஒருவனே நாத்திகன் என்று எப்படிக் குற்றம் சாட்டமுடியும்? கண் இருப்பதால் பார்க்கிறேன். கால்கள் இருப்பதால் நடக்கிறேன். கைகள் இருப்பதால் வேலை செய்கிறேன். காதுகள் இருப்பதால் கேட் கிறேன். வாய் இருப்பதால் பேசுகிறேன். அதேபோல் உள்ளம் இருப்பதால் சிந்திக்கிறேன். இது எப்படித் தவருகும்?

என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகள் யாரையும் உங்கள் முன் நிறுத்தி நான் குறுக்கு விசாரஆன செய்ய விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். இவர்களெல்லாம் அவை. களின் நிழல்கள்.

மூன்றாவது குற்றச்சாட்டு, நான் இளைஞர்களைக் கெடுத்து விட்டேன் என்பது. நான் எந்த வகையில் அவர்களைக் கெடுத்து விட்டேன் என்பது எனக்கே புரியவில்லை. ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, முப்பது ஆண்டுகளாக நான் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். ஒருவனுக்கு, பிறர் சொல்வதைப் புரிந்து கொள்கிற வயது 10 என்று வைத்தால் 40 வயதுடைய மனித குைம் வரையிலாவது நான் சொல்லியதை அவன் கேட்கும் வயதடைந்திருப்பான். இந்த முப்பதாண்டுகளாக வராத ஆபத்து இப்போது எப்படி வந்தது? சூரியனைக் கல் என்றும் சந்திரனே மண் என்றும் நான் சொன்னேன் என்று குற்றமாகச் சொல்கிரு.ர். இந்த உதாரணங்கள் மூலம் மெலிடஸ் என்னை