பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158 உலகைத் திருத்திய

மன வேதனையை எண்ணினால் வியாதியைக் குணப்படுத்த முடியாது. கேவலம் வாழ்க்கையை மட்டும் நாம் கவனிக்கக் கூடாது. நல் வாழ்க்கையையே மதிக்கவேண்டும். அதனால் நீங்கள் துன்பத்தில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது.

கிரீடோ : உங்களைத் தப்புவிப்பதன் மூலம் நாங்கள் அரசாங்க தண்டனை பெற்றுவிடுவோம் என்றும், பெரும் நஷ்டத்தை அடைவோம் என்று தாங்கள் எண்ணவேண்டாம். அதற்காக நாங்கள் கவலைப்படவேயில்லை. தாங்கள் எப்படியும் உயிர் பிழைக்கவேண்டும்.

சாக்ரடீஸ் : ஆம். நான் அதை ஆழ்ந்து சிந்திக்கிறேன்.

கிரீடோ : சிந்திக்க ஒன்றுமேயில்லை. உங்களை வெளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். என் பொருள் மாத்திரமல்ல. என் உயிரே உங்கள் விடுதலைக்காக. கிளம்புங்கள். வெளி நாடு செல்ல ஏற்பாடு செய்துவிட்டோம். அங்கே தங்களுக்கு எவ்விதத் தொல்லையுமின்றி பாதுகாக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் சாவதன் மூலம் உங்கள் குழந்தைகளை நிர்க்கதியாக்குகிறீர்கள். அனாதைக் குழந்தைகளின் நிலைக்கு அக் குழந்தைகளைக் கொண்டுவராதீர்கள். எதிரிகளைக் கொழுக்க விட்டு விட்டுத் தாங்கள் உயிர் விடத் துணிந்ததை நான் மிகமிக அவமானமாகக் கருதுகிறேன். தப்பித்துக்கொள்ள வாய்ப்பிருந்தும் அப்படிச் செய்யாமல் போவது, நாம் எந்த நன்மைக்குமே தகுதியற்றவர்கள் என்பதைத்தான் காட்டும்.

சாக்ரடீஸ் : அன்புள்ள கிரீட்டோ, உங்கள் முடிவைப் பாராட்டுகிறேன். ஆனால், நாம் எது சரி என்பதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினோமோ அந்த நிலையே நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. வருங்காலம் நிச்சயம் தான் கடந்து வந்த இறந்த காலத்தை எண்ணி வருந்தவே செய்யும். போர்முனைகளில் ஆயுதத்தையும், அஞ்சாமையையும் துணை வைத்துப்_போராடினோம். பிறகு