இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4 முகமது நபிகள் _____________
"ஏகி குதா - ஏகி பந்தா” 'ஒன்றே குலம், ஒருவனே தெய்வம்' என்ற கொள்கை, போரில் அடிபட்டு கால்கள் கைகளில் இரத்தஞ்சிந்தி, ஆண்டவன் ஒருவனே என்ற கொள்கையை நிலைநாட்டி, இன்று சுமார் பத்து கோடி பேர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு அரும்பாடுபட்டவர் நபிகள் பிரான் அவர்கள்.
தாய் ஆமீனா பிராட்டியர், தந்தை அப்துல்லா. நபிகள் கர்பகத்திலிருக்கும்போதே தந்தையை இழந்துவிட்டவர். பிறந்த ஆறாவது ஆண்டில் தாயை இழந்து விட்டவர். தன்னைப் பாசமோடு வளர்த்த பாட்டனார் அப்துல் முத்தலீப் என்பவரை எட்டாவது வயதில் இழந்து, பிறகு சிறிய தந்தை யாரிடம் வளர்ந்து பனிரெண்டாவது வயதிலேயே வியாபாரத் தொடர்பாக தன் சிறிய தந்தையாரோடு சிரியாவுக்குச் சென்றவர்.
இவருடைய தந்தையார் அப்துல்லா என்பவர் எப்படி உயிர் பிழைத்தார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம். அரேபியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம். அரேபியா என்ற சொல்லுக்கு 'ஆரப்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதால் அரேபியா என்றும், ஆரப் என்றால் கருநிறமணல் நிறைந்த பகுதி; ஆகையாலே அரேபியா என்கிறார்கள். எது எப்படிபிருந்