பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தமர்கள் 191

மாதம் 13ம் நாள் கிராஷியளுக் என்ற ஊரில் திருமணம் நடந்தது. இவன் இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந் தும், கொள்கைப் பிடிப்பும் சதா சிந்தனையிலும் முழ்கியிருந்த தால், ஒரு நிரந்தரமான வேலையைத் தேடாமலேயே பல பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியனுப்புவதும், ஆங் காங்கே சங்கங்கள தோற்றுவிப்பதும், அவற்றிற்குத் தலைமை வகிப்பதும், அகில உலக தொழிலாளர் மகாநாடு கூட்டுவதும், அரசாங்கத்தால் தடைசெய்யப்படுவதும், பல பத்திரிகைளைத் தொடங்குவதும், ப்ரன்ஸல்ஸ் , பிரான்சு முதலான ஊர்களில் சிறு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அலைவதும், இவன் சொந்தப் பொருளையும் ஜென்னியின் பொருளையும் செலவழிப் பதும், மிகக்கொடிய வறுமையால் வாடுவதும், குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்முக இறப்பதும், அவற்றைப் புதைக்கக்கூட சவப்பெட்டி வாங்கமுடியாமல் தவிப்பதுமாகவே காலம் கடத்தி விட்டான். ஆயினும் எந்த நோக்கம் ஈடேற வேண்டு மென்று நினைத்தானே அவற்றிற்கு நேரம் கிடைத்த போதெல்லாம் குறிப்புகள் எடுத்திடத் தவறியதேயில்லை,

கார்ல் மார்க்ஸ் லண்டனுக்கு வந்து பன்னிரெண்டு ஆண்டு கள் ஓடிவிட்டன. அந்தக் காலத்தில்தான் இவனுடைய படைப் பாகிய காபிடல் என்ற நூல் தோன்றியது. இதற்காக இவன் படித்த நூல்கள் சுமார் ஆயிரத்தி ஐநூறுக்கும் அதிகமாகவே இருக்கும். .876ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 16ம் நாள் காபிடல் அச்சாகி முதல் பிரதி வெளியாகிவிட்டது. அன்று விடியற் காலை இரண்டு மணிக்கு ஏஞ்செல்ஸுக்கு கீழ்வருமாறு எழுதினன். -

அன்புள்ள ஏஞ்செல்ஸ்,

இந்த முதல்பாகம் முடிந்தது. இதற்கு நீ ஒருவனே காரணம். என் நன்றியை ஏற்றுக்கொள். எனக்காக நீ தியாகம் செய்திராவிட்டால், இந்த நூலின் மூன்று பாகங்களை யும் நான் தயாரிக்கவே முடியாது. வந்தனத்தோடு உன்னை