பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

புரட்சி செய்த

சுவைப்பதைவிட உணவிட்டவளின் அங்க அசைவுகளையே பார்த்துக்கொண்டிருப்பானாம். இதை அவனே ஒப்புக்கோள்கிறான். “நான் பதினைந்து பதினாறு வயதிற்குள்ளாகவே கட்டுக்கடங்காத காமாந்தகாரனாய்விட்டேன்” என்கிறான் ஓரிடத்தில்.

அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். ஊருக்கடங்காத பிள்ளையாக இருந்து, தந்தையிடம் அடி வாங்கி வாங்கி எங்கோ ஓடிவிட்டான். தந்தை அவனைத் தேடவுமில்லை. அவனைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. ரூசோ மிகுந்த இசை ஞானம் பெற்றவன். அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் கை கொடுக்கவில்லை. பிளாட்டோவுக்கு அடுத்தாற் போல் அரசியலை இலக்கிய பாணியில் எழுதி, நமது நெஞ்சை அள்ளுபவர் ரூசோதான் என்று பல அறிஞர்கள் கூறுகிறார்கள். சிந்தனையாளர்களுள் டெக்கார்டேவுக்குப் (Decarta) பிறகு மனித அறிவை மிகப்பெரிய அளவில் இயக்கியவர் தத்துவஞானி ரூசோதான்.

இறந்தகாலம் தொடங்கி, நிகழ்காலத்தில் நடந்து, எதிர்காலத்தையும் கடந்து, எல்லாக் காலங்களின் துழைவாயிலிலும் ரூசோவைக் காண்கிறோம்; காண்போம்.

பிறப்பு

1712ல் ஜெனோவாவில் பிறந்தார். தந்தையின் பெயர் ஐசக் ரூசோ. கைக்கெடிகாரம் செய்யும் தொழிலை வெகு சிறப்பாக நடத்திவந்தார். தாயின் பெயர் சூசன் பெர்னார்ட். மிக அழகுள்ளவள். ஒரு மதகுருவின் மகள். ரூசோவைப் பெற்றெடுத்தவுடன் இறந்துவிட்டாள். தந்தை மறுமணம் செய்துகொண்டு நாற்பதாண்டுகளுககுப் பிறகு அவரும் இறந்துவிட்டார். பாட்டனாரிடத்திலே வளர்ந்தார். பிறகு அத்தையிடத்தில். இப்படி மாறி மாறித் தாய் தந்தையற்ற வாலிபனாய் இருந்தும்கூட நாவல் படிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். பிறகு நாவல்களைப் படிப்பதை விட்டு