பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

புரட்சி செய்த

நாட்டுமன்னன் பிரடெரிக்கை ரூசோவுக்கு அறவே பிடிக்காது. அவனுடைய தார்மீக சக்தியில் காலூன்றாது அசுரபலத்தையே நம்பி வாழ்ந்த நாடு என்பது இவனுடைய கருத்து. அதனால்தான் அம்மன்னனைப் பற்றி “அவன் தன்னை தத்துவ ஞானி என்று கூறுகிறான்; ஆனால் அரசனைப் போன்று அரசோச்சுகிறான்” என்று குறிப்பிடுகிறார்.

அங்கேயும் இவன் நிம்மதியாக வாழமுடியவில்லை. இவனைக் கண்டால்போதும்; பெருங்கூட்டம் சேர்ந்துகொண்டு கேலியும், கிண்டலும், இழிமொழியும் சரமாரியாகப் பொழிவார்கள். அங்கிருந்து தப்பிச் செல்வதெங்கே என்ற கேள்வி? அந்த அரசர்கள் வேறு பல பயங்கரமான சட்டங்களைத் தீட்டியிருந்தனர். ஆனால் அவ்வளவும் பலிக்காமல் போயின.

அதனால் மொத்தியாஸ் கிராமத்தில் ரூசோவை பாராட்டி வந்தவர்களுள் வெர்டினல் சீமாட்டியும் ஒருத்தி. அவ்வட்டாரத்திலிருந்த மக்கள் அந்த அம்மையாரிடம் மிகுந்த அடக்கத்துடனும், பயத்துடனும் நடந்து வந்ததால், அந்த அம்மையாரோடு ரூசோ இருக்கும்வரை யாரும் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த அம்மையார் ரூசோவை இங்கிலாந்து சென்று தங்கும்படி யோசனை கூறினார், ஸ்காட்லாந்து கேசத்தில் புகழ் வாய்ந்த தத்துவமேதையான டேவிட் ஹியூம் (Davide Hume) என்பவர் ரூசோவுக்கு நேரடியாகத் தெரியாது. ஆனால் ரூசோவைப் பற்றியும், அவரின் ஆற்றலைப் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருந்தார்-வெர்டினல் சீமாட்டியிடமிருந்த கடிதத்தின் மூலம் அறிமுகமாய் அவரிடமிருந்து பல உதவிகளைப் பெற்று மிக நிம்மதியாக வாழ்ந்து தன் அரசியல் இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து செய்யலாம் என்று, பிரஷ்ய நாட்டிலிருந்த ரூசோவுக்கு ஹயூம் அவர்களே ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேலும் மொதியாஸ் கிராமத்திலிருந்த மக்கள் ரூஸோவுக்கு எவ்வளவு இன்னல்கள் விளைவிக்க முடியுமோ அவ்வளவையும் நேரடியாகவே செய்யத் தொடங்கினார். இதையறிந்த பிரடெரிக் மன்னன். ரூசோவுக்கு எந்த