பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

69

விதமான ஆபத்தும் இழைக்கக் கூடாதென்றும், அப்படி யாராவது பலாத்காரத்தில் இறங்கி அவரைத் தாக்கினால், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தன் அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை செய்திருந்தான். இதனால் மக்கள் மன்னனுக்கு சரியான தகவல் தரவில்லையென்றும், அவன் ஒரு கிருஸ்துவின் விரோதி என்பதை மன்னனுக்குச் சுட்டிக் காட்டவில்லை. ஆகையால் எப்படியும் அவனை ஒழித்தே தீருவதென்று ஜன்னல்கள் வழியாகக் கற்களை எறிவதும், வசைபாடுவதுமாகவே இருந்தார்கள். மீண்டும் செயிண்ட் பியர்ஸ் தீவில் தங்க வேண்டி வந்தது. அத்தீவும் ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமானது. அங்கு மட்டும் நிம்மதியாக தங்கவிடுவார்களா? ஒரு நாள் ஒரு கடிதம் வந்தது, ரூசோவுக்கு. அதை பிரித்துப் பார்த்ததில், “இந்த கடிதம் கண்ட இருபத்து நான்கு மணி நேரத்தில் தீவிலிருந்து காலி செய்துவிட வேண்டும், இது அரசாங்க உத்திரவு” என்றிருந்தது. வேறு எங்கு செல்வதென்று தெரியாமல், தன்னைக் கைது செய்து நிரந்தரமாக ஒரு சிறையில் வைத்துவிடும்படி, அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு பழைய உத்திரவையே வலியுறுத்திவிட்டது. வேறு வழியில்லை. நேராக பெர்லினுக்குக் கிளம்பி, சில சூழ்நிலையின் காரணமாக இங்கிலாந்துக்கு வரவேண்டியேற்பட்டது. அங்கே ஹியூம் என்பவரின் ஆதரவில் தங்கினார் என்று முன்பு சொன்னோம். இங்கிலாந்து எதையும் தாங்கும் இதயம் படைத்தது என்று நாம் கூறியதற்கிணங்க, லண்டன் நகரம் முழுவதும் வளைவுகளும், தோரணங்களும் கட்டி, “மண் பொது தந்தையே வருக! வருக! மானிடவர்க்கத்தின் காப்பாளனே வருக! அடிமை சங்கிலியை சுக்கு நூறாக்கிய தீரனே வருக! வருக! வாள் பெரிதென்றனர் மன்னர்கள், ஜெபமாலை சக்தி வாய்ந்தது என்றனர் குருமார்கள். அவற்றை எல்லாம் விட, ‘இதோ என் பேனா சக்தி வாய்ந்தது’ என மையிட்ட எழுதுகோலைக் காட்டி மன்னர்களின் மடமையை, மதகுருமார்களின் ஆணவத்தை அடியோடு சாய்த்த செஞ்சொல் வீரனே வருக! காலமெல்