பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

புரட்சி செய்த

இதில் வால்டேருக்கு மட்டும் விதிவிலக்கா என்ன என்று சீறினான் மன்னன். அந்த நேரம் லா மெட்ரி (‘La Mettrie’) என்பவர் நாத்திகத்தைத் தழுவி, ஆத்மாவின் இயற்கை சரிதம் (Natural History of the Soul) எழுதியதின் விளைவாக, அவர் தன் வேலையை இழக்க நேர்ந்தது. அதற்கடுத்தாற்போல், மனிதன் ஒரு யந்திரம்? (Man Machine) என்ற நூலையும் எழுதினார். இவனும் மன்னனுக்கு மிக வேண்டியவனாகையால் எப்படியும் வால்டேரை வெளியேற்றிவிடவேண்டும் என்று அடிக்கடி மன்னனுக்குத் தூபம் போட்டுக் கொண்டிருந்தான். அதற்கு பிரெடிரிக் மன்னன்: “அதிகமாகப் போனால் வால்டேர் இன்னும் ஒரு ஆண்டு இங்கு இருக்க வேண்டியிருக்கும். அவரிடம் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் பிறகு ஆரஞ்சுப் பழத்தை பிழிந்த உடன் தோலை எரிந்துவிடுவதைப்போல் எரிந்துவிடலாம்,” என்றான். இது வால்டேருக்கு எட்டியது. இருந்தாலும் ஒருவருக்கொருவர் இதை அறிந்து கொள்ளாதவர்கள் போலவே நடந்துக்கொண்டனர். ஆனால் பகை மட்டும் வளர்ந்துகொண்டே வந்தது.

நியூட்டன் சித்தாந்தத்தின் மூலமாக எழுந்த சர்ச்சையில் தான் நியூட்டன் சித்தாந்தத்தின் பக்கமும், பிரட்ரிக் மன்னன் ஜெர்மன் மக்களுக்கு ஒரு அறிவு புரட்சியைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற காரணத்துக்காக தருவித்திருந்த மாபார்டி (Maupertuis) பக்கம் சேர்ந்து விவாதித்ததின் விளைவாகவும் மன்னனுக்கும் வால்டேருக்கும் இருந்த மனக்கசப்பு கொஞ்சம் அதிகமாயிற்று. தனக்கு ஈடான ஒரு அறிவாளியை தோற்றுவிக்க மன்னன் முயலுகிறான் என்ற ஐயமும் வால்டேருக்கு ஏற்பட்டது. டாக்டர் அகேகியாவின் எதிர்ப்பு முழக்கம் (Diatribe of Dr. Akakia) என்ற ஒரு நூலை எழுதினார். வால்டேர் முன்பு பிரான்சிலிருந்து நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம், சாலமோன் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து பதின் மூன்றாம் லூயின் காலம் வரை என்ற ஒரு நூல் எழுதியிருந்தார். இதில் மதகுருமார்களை சந்திக்கிழுத்து வந்து மக்களின் முன்னே குற்ற விசாரணை நடத்துகிறார். மக்களைச் சிந்திக்க