16
நாடக உரையாடல்கள் 'ஒரு மூடனுக்குக்கூட புரியும் படி அவ்வளவு சுலபமாக இருக்க வேண்டும்," என்றார் நடிகர்.
நாடகாசிரியர், 'ரொம்ப நன்றி. உங்களுக்கு எந்த இடம் என் நாடகத்தில் புரியவில்லையென்று சொல்லுவீர்களா? திருத்தி விடுகிறேன்!' என்றார், வெகு அமைதியாக.
சுமார் நாலாயிரத்து ஐநூறு ஆண்டுகட்கு முன்பு :
சீன தேசத்தில் ஷீ-லிங்-ஷீ என்னும் ஓர் அரசி ஆண்டாள். ஒருமுறை அவள் தேநீர் பருகிய சமயம், உயரத்தே முசுக்கட்டை மரத்திலிருந்து ஏதோ ஒன்று தேநீர்க் கிண்ணத்தில் விழுந்ததாம். ராணி பதட்டத்துடன் கோப்பையை உற்றுப் பார்த்தாராம். அழகிய மெல்லிய இழைகள் தெரிந்தனவாம். அவ்விழைகள் பளபளத்தன. உடனே நூல் நெசவில் தேர்ந்தவர்களை அழைத்தாளாம். அரசியே தறியில் குந்தி நெய்யத் தொடங்கினாளாம்.
உலகத்திலேயே முதல் பட்டாடை இந்தச் சீன அரசியினுடையதே தானாம்!
அந்தச் சாயாவுக்கு அவ்வரசியின் நன்றி. தினமும் தெரிவிக்கப் பட்டு வந்ததாம்!