பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

கல்வியில் சிறந்த தமிழ்நாடு

ந்தியாவிலேயே “கல்வியிற் சிறந்தது தமிழ்நாடு” என்ற பாராட்டை நாம் விரைவில் பெற்று விடுவோம். தமிழ் நாட்டில் பள்ளிக்கூடங்கள் இல்லாத ஊரே இல்லை. படிக்காதவர் இல்லை என்ற பெருமையும் சீக்கிரமே நமக்குக் கிடைக்காமலா போகும்? சென்னையில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள கீரநல்லூர் கிராமத்தின் ஜனத்தொகை 587. ஆனால் அங்கேயும் ஓர் உயர் நிலைப்பள்ளி இருக்கிறது.

வீடு வீடாகப் போய்ப் பணம் வசூலித்து உயர் நிலைப்பள்ளி கட்டி இருக்கிறார்கள் இவர்கள்! தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளின் தேவையைத் தாங்களாகவே முன்வந்து பூர்த்தி செய்வதில் தமிழர்கள் காட்டியுள்ள அக்கறை பிரமிக்கத் தக்கது. 37 ஆயிரம் பள்ளிகளுக்கு இவ்வாறு தானாக வந்து குவிந்த உதவிகளைக் கணக்கிலிட்டால், பத்து கோடி ரூபாய் ஆகிறது!

நல்லவேளை!

நேப்பிள்ஸ், 1965 ஆகஸ்ட் 18- வின் சென்ஸோ என்ற 15 வயது இளைஞனது ஈமக்கிரியைகள் நடைபெற இருக்கும் சமயத்தில் அந்த இளைஞனே வீடுவந்து சேர்ந்தான்! பெற்றோர்கள் இவனைக்கண்டதும் பிரமித்துப்போயினர். ஆனால் மகிழ்ச்