பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இப்போதே மணி சொல்லாமலிருந்தால், இவை யாவற்றையும் தடுக்கலாம் என்று தான் நான் மணியைச் சொல்ல வில்லை... !" என்றான் கிழவன்.

1961ல் கதர்த் தொழில்

தர்த் தொழிலால் நம் நாட்டில் முன்னேற்றம் கண்டுள்ள கிராமங்கள் சுமார் லட்சமாகும். மொத்தத்தில் சுமார் 15 லட்சமக்கள் நாடு முற்றிலுமாகக் கதர்த் தொழிலினால் நன்மை பெற்றிருக்கிறார்கள். அவர்களில் மூன்றிலொரு பங்கு, அதாவது 5 லட்சம் பேர். சென்னை. மாநிலத்திலுள்ளவர்கள். 1959. 60ல் 2, 47, 270 கிஸான் ராட்டை நூற்பவர்கட்கு 43, 44, 038 ஊதியம் தரப்பட்டது, 64, 886 ராட்டைகள் விநியோகிக்கப் பட்டன. 19, 836 அம்பர் ராட்டைகள் பயிற்சி பெற்றோர்க்கு வழங்கப் பட்டன. 1959-60ல் தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் ஆதரவில் வேலை வாய்ப்புப்பெற்ற நூற்பவர் எண்ணிக்கை : 1 22, 500. நெசவாளர்கள் : 3, 286. வழங்கப் பெற்ற ஊதியம் ரூ 72, 57, 225. கதர் உற்பத்தி 45, 23, 503 கஜம், பெறுமதி ரூ.94, 85, 154.

ஜட்கா விலை!

சென்ற மகா யுத்தத்தின் போது: அமெரிக்கச் சிப்பாய் ஒருவன் சென்னையில் ஜட்கா வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பிரயா