பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

150 விருதுகள் பெற்றவர்கள்

"இறுதி வெற்றி நமக்கே!" என்று பறை சாற்றி, 'V' எனும் ஆங்கில எழுத்தை நமது இரு விரல்களால் காட்டி, இறுதியில் இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற சரித்திர வீரர் சர் வின்ஸ்டன் சர்ச்சில்.

முப்பதுக்கு மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் இவர், நூற்றைம்பதுக்கும் மேலான விருதுகள் பெற்றவர். நோபல் பரிசும் கிடைத்தது. அமெரிக்கா இவரை தமது தேசத்தின் கௌரவ பிரஜையாக 1953ல் தேர்த்தெடுத்தது. வெளி நாட்டவர் ஒரு வரை அமெரிக்கா கெளரவப் பிரஜையாக ஏற்றது. அதுவே முதல் தடவையாகும்!

"பக்கிரி"

காந்திஜிக்கு அரை நிர்வாணப் பக்கிரி என்று. பட்டப் பெயர் சூட்டினவர் ஸர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆனால் காந்திஜி இவ்வாறு அரை நிர்வாணப் பக்கிரியாக விளங்க ஏதுவாக இருந்தது; மதுரை மக்கள் உடுக்க போதுமான உடை இல்லாமல் அவதிப்பட்ட காட்சிகளைக் கண்டார்; தாமும் ஒரே ஆடையையே உடுத்துவது என்ற விரதத்தை மேற் கொண்டார் !

4