பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

உயிர் மரம்!

நேருஜியின் சொந்த ஊரான அலஹாபாத்தில் ஒரு பெரிய வேப்ப மரம் இருக்கிறது.

1857ல் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் பலர் தூக்கிலிடப் பட்டனர்.

1956ல் அலஹாபாத் முனிஸிபல் நிர்வாகிகள் இதை ஏலத்துக்கு விட்டனர். ஆனால் ஏலம் எடுத் - தவரை, மரத்தை வெட்ட விடாமல் தடுத்து விட்ட னர் பொது மக்கள்.

இம் மரம் இன்னும் உயிருடன் இருக்கிறது!

தொங்கு விளக்கு

மரக் காதலர்களான அரகதம் பகுதியின் பிரசித்தி பெற்ற கல்லறைகளின் ரோஜாவாக விளங்கிக் கொண்டிருக்கும் அழகுத் தாஜ்மஹாலுக்கு உள்ளே, கல்லறைகளுக்கு மேலே, சிறியதொரு வெண்கலத் தொங்கு விளக்கு காட்சியளிக்கிறது.

இவ்விளக்கு 1806ல் இந்தியாவின் வைஸ்ராயான கர்ஸான் பிரபுவால் மும்தாஜ் மஹாலின், சமாதிக்கு அன்பளிப்புச் செய்யப் பட்டது.!

மும்தாஜ்மஹால்-ஷாஜஹான் தம்பதிக்கு இவ்

விளக்கும் ஓர் அழியாத நினைவுச் சின்னமாக அமைந்தது. போலும்!