பக்கம்:உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9



அவ்வாறு ஈகையைச் செய்யும் போது என்ன பயன் உண்டாகிறது என்பதை அவர், "நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி' என்று அற்புதமாகச் சுட்டுகின்றார்.

கி.பி.1631-ஆம் ஆண்டில் பிறந்து கி.பி. 1700 ஆவது வருடத்தில் தனது வாழ்நாளை முடித்து மாண்ட ஆங்கில நாட்டின் சிறந்த கவிஞரான 'டிரைடன்' என்பவர், அதே அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அன்பு உண்டு, இரக்கம் இல்லை என்று கண்கட்டுவித்தைக் காட்டமுடியுமா? ஏனென்றால், அன்பும், இரக்கமும் இரட்டைக் குழந்தைகளே” என்று சுட்டிக் காட்டுகின்றார்.

நான் எழுதுகின்ற ஒவ்வொரு சொல்லும் விலை மதிப்பற்றது என்பதையே பெயராகக் கொண்ட மாபெரும் ஆங்கில நாட்டுப் பெருங்கவிஞரான வோர்ட்ஸ் வொர்த் கி.பி.1770-ஆம் வருடம் பிறந்தவர் கி.பி.1850-ஆம் ஆண்டு விலை மதிப்பற்ற தனது எண்பதாண்டு கால உலக வாழ்வுடன் மறைந்தார்.

'அன்பு' என்ற தத்துவம் பற்றி அவர் என்ன கூறுகிறார்? "மனித வாழ்வின் புனிதமான பாகம் அன்பு மறந்து போன அருள்நிறைந்த சிறு அக உணர்வின்செயல்கள் என்று விலை மதிப்பே அற்ற உணர்வை மனிதனுக்குள் சுரக்கச் செய்கிறார்.

ஆங்கில நாட்டின் மாபெரும் எழுத்துலக மேதை என்று அழைக்கப்பட்டவர் மார்லி என்பவர். அவர் கி.பி.1838-ஆம் ஆண்டில் தோன்றி கி.பி.1923-ல் புகழ் எய்தியவர்.