பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/115

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 中 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதைவிட அவைகளை நாம் எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது இன்பம். அ ஹம்போல்ட்
  • இன்பம் நம் ஆசைகள் நிறைவேறுவதிலும், நாம் நியாயமான

ஆசைகளை மட்டும் வைத்திருப்பதிலும் உள்ளது. அ அகஸ்டின்

  • எந்த மனிதனையும், அவனுடைய வாழ்க்கையின் முடிவை அறியுமுன். மகிழ்ச்சியுள்ளவன் என்று கூற வேண்டாம். அதுவரை அவனை அதிருஷ்டசாலி என்று வேண்டுமானால் கருதிக்கொள்ளலாம். அ ஹிரோடோட்டஸ்
  • இன்பம் வாழ்க்கையின் இலட்சியமன்று. குணமே இலட்சியம் அ பீச்சர்
  • பூரணமாக உழைத்துக்கொண்டேயிருந்த எந்த மனிதனும்

மிகவும் வருந்தத்தக்க நிலையை அடைந்ததில்லை. லாண்டின் بسیار * எந்த மனிதன் தன் வாழ்க்கையின் இறுதியையும் தொடக்கத் தையும் இணைக்கும் தொடர்பை அறிந்துள்ளானோ அவனே இன்பமான மனிதன். அ ேைத

  • உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப்பற்றிப் பேச வேண்டாம். அ புளுடார்க்

  • இடமும், நிலைமையும் முக்கியமல்ல; மனம் மட்டுமே

ஒருவனை இன்புறவோ, துன்புறவோ செய்கின்றது. அ லா மாஸ்டிரேஞ்ச் இன்பம் துய்த்தல்

  • இன்பம் துய்ப்பதில் தன்னை அடக்கிக்கொள்வதே நல்ல விதியாகும் அ வாண்டன்