உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி உண்மையான அனுபவம் மனத்தின் செயலிலும் உடலின் உழைப்பிலும் தோன்றுவது இரண்டும் எப்பொழுதும் இணை பிரியாதவை. அ ஹம்போல்ட் மனிதன் துய்க்கும்படி அனுமதித்துள்ள இன்பத்தின் அளவு மிகச்சிறியதுதான். அ பிளேர் உறக்கம், செல்வங்கள். ஆரோக்கியம் மற்றும் ஒவ்வோர் அருட்பேறும் இடையிடையே நின்று. பின்னால் மீண்டு வந்தால்தான் முழு அனுபவமும் கிட்டும். . ரிச்டெர் இன்னலும் துன்பமும் தத்துவத்திற்காக நடக்கும் பரீட்சையே இன்னல், அது இல்லாவிட்டால், ஒரு மனிதன் தான் நேர்மையாளனா அல்லனா என்பதைத் தெரிந்து கொள்ள இயலாமற்போகும். க. பீல்டிங் துன்பமே உண்மைக்கு முதல் வழி. . பைரன் வறுமை. உள்ளே அடங்கிக் கிடக்கும் அறிவாற்றல்களை வெளிவரச்செய்கின்றது. செழிப்பான நிலைமைகளில் அவை அடங்கியே கிடக்கும் - . ஹொரேன் செழிப்பு ஓர் ஆசிரியர் வறுமை அதைவிடச் சிறந்த ஆசிரியர் செல்வம் மனத்திற்கு வேண்டியதையெல்லாம் அள்ளிக் கொடுக்கும். கஷ்டம் மனத்திற்குப் பயிற்சி அளித்து வலிமைப் படுத்தும். -- * - ஹாஸ்லிட் கோதுமையைத் தீட்டும் போது அதை உமியிலிருந்து பிரிப்பது: போல. இன்னல் நல்லொழுக்கத்தைச் சுத்தமாக்கி எடுக்கின்றது. - .க பர்டன் வாழ்க்கையின் வெயிலில் கொஞ்சம் காய்ந்தும். மழையில் கொஞ்சம் நனைந்தும் வந்ததால், எனக்கு நன்மையே ஏற்பட்டிருக்கின்றது. அ லாங்.:பெல்லோ