பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 to உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் உண்ணல் 女 உண்பதன் இன்பம் மதிப்புயர்ந்த பொருள்களைத் தாளிப் பதிலோ நறுமணத்திலோ இல்லை. அது உன்னிடமேயுள்ளது. உன் உழைப்பே உருசியளிக்கின்றது. அ ஹொரேஸ் விருந்துக்குச் செல்லலாம்; ஆனால், கொஞ்சம் பசியிருக்கும் போதே எழுந்துவிட வேண்டும். Le (lamprirfl4 ஆரோக்கியத்திற்காக மருந்துகளை நிறுத்தோ அளந்தோ உட்கொள்கிறோம்; அதே போல, உணவையும் அளவோடு புசிக்க வேண்டும். அ ஸ்கெள். கன் பணக்காரனுக்கும் ஏழைக்கும் இதுதான் வேற்றுமை, முன்னவன் தான் விரும்பிய பொழுது உண்பான். பின்னவன் உணவு கிடைத்த பொழுதுதான் உண்பான். அ வர் வால்டர் யாவே ஒருவன் வாழ்வதற்காக உண்ண வேண்டும்; உண்பதற்காக வாழக்கூடாது. அ ஃபிராங்க்லிகள் உதவி உலகில் ஒருவன் நிலை தாழ்ந்திருந்தால், அவனுக்கு ஒர் உபதேசம் அளிப்பதைவிட ஒரு பலம் உதவி செய்வது மேலாகும். ո լյ-անմամ உனக்கு நீயே உதவிக்கொண்டால், கடவுளும் உனக்கு உதவி செய்வார். பலர் உழைப்பில் பங்கெடுத்துக்கொண்டால், வேலை எளிதாகி விடும். ~ (Fwydruyri