பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • எந்த மனிதனும் நியாயமானதைச் செய்வதற்குத்தான் உரிமையுண்டு; தன் விருப்பம் போல் செய்வதற்கு உரிமை யில்லை. - ஸி. ஸிம்மன்ஸ்
  • ஒரு கடமை, சம்பந்தமில்லாத உரிமை கிடையாது. சட்டத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாத சுதந்தரம் கிடையாது. இடைவிடாத முயற்சியில்லாமல் பெருமை கிடையாது. - வீபெர் .

எல்லா மனிதர்களும் தம்மிடமிருந்து பிரிக்க முடியாத உரிமைகளை இறைவனால் அருளப்பெற்றுள்ளனர். இவை களில் உயிர்ப்பாதுகாப்பு, சுதந்தரம், இன்பத்தை அடையும் முயற்சி ஆகியவை சேர்ந்துள்ளன. அ ஜெஃப்பர்பைன் உரிமைகளைப் பெற்றிருப்பதில் முதன்மையான சிறப்புகளுள் ஒன்று என்னவெனில், அவை உன் உரிமைகளேயாயினும், நீயாக அவைகளை விட்டுக்கொடுக்கலாம் என்பது. அ. ஜி. மாக்ர்டொனால்ட் உருவகக் கதைகள் உரையாடலின் நடுவில் கூறப்பெறும் உருவகக் கதைகள் ஒளிப்பிழம்புகள் போன்றவை. ஆனால், அவை நன்கு தேர்ந்தெடுத்தவைகளாக இருக்க வேண்டும். அவை எல்லா விஷயங்களையும் தெளிவாகவும் அழகாகவும் காட்ட உதவுகின்றன. அ அடி பைன் உருவகக் கதைகள் நேர்த்தியான ஆபரணங்கள். நல்ல விளக்கங்கள்: ஆனால், அவை விஷயங்களுக்கு நிரூபணமாக மாட்டா. அ லூதர்