பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

u. Wartt civarauf * 137 வரவேற்பு இராது. அதுபோலவே, உன் கருத்துகள் எவ்வளவு நீதியானவைகளாயிருந்தபோதிலும், உன் எழுத்து நடை கரடு முருடாயும். நாகரிகமின்றியும். பாமர முறையிலும் இருந்தால், உன் எழுத்துக்குச் சரியான வரவேற்பு இராது நடைதான் கருத்துகளின் உடை. அ செஸ்டர்ஃபீல்ட் தேவையற்றவைகளை ஒதுக்கித் தள்ளுவதிலிருந்து தெளி வான நடை ஏற்படும். அ. திருமதி நெக்கர் நடையில் வல்ல கலைஞனை அவன் கூறாமல் விடுகிற விஷயங்களிலிருந்தே நான் கண்டு கொள்கிறேன். ஷில்லர் நடை. ஆளைக் காட்டிவிடும். அ லத்தீனிலிருந்து ஒர் ஆசிரியர் தெளிவாயில்லை என்று குறைகூறும் வாசகன். தன் உள்ளத்தையும் பார்த்து, அங்கு எல்லாம் தெளிவாயிருக் கின்றனவா என்பதைக் கண்டுகொள்ள வேண்டும் எவ்வளவு தெளிவான எழுத்தாயிருந்தாலும், இருளில் கண்ணுக்குப் புலனாகாது. அ கதே எளிய வாழ்க்கை எளிமை இயற்கையின் முதற்படி கலையின் கடைசிப்படி. அ பி.ஜே. பெய்லி மிகச்சிறந்த உண்மைகள எளிமையாயுள்ளன. தலைசிறந்த மனிதர்களும் அப்படியே இருக்கின்றனர். அ ஹேர் குணத்திலும். பாவனைகளிலும், நடையிலும் எல்லா விஷயங் களிலும் மிக உயர்ந்து நேர்த்தியாக விளங்குவது எளிமைதான். அ லாங்ஃபெல்லோ ஏகாந்தம் மனம் ஏகாந்தத்தை விரும்பினால், அதன் மூலம் அது குணத்தில் மேம்பட்டிருப்பதாகும். அது ஏகாந்தத்தின் ருசியை