உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ஒய்வு பெறுதல் 女 பெருஞ்சாலையை விட்டு விலகி, காப்புள்ள ஓரிடத்தில் போய்த் தங்கியிரு. ஏனெனில், சாலையருகிலுள்ள மரத்தில் காய் காய்த்தால், அது கனியும்வரை இராது. அ. கிரிஸோஸ்டம் ஒய்வெடுத்துக்கொண்டு ஒதுங்குவதை நன்கு அனுபவிப் பதற்கு, அடிப்படையான நல்ல உலகியல் அறிவும், படிப்பில் ஆர்வமும் வேண்டும் அப்பொழுதுதான் ஓய்வின் இனிமை தெரியும். அ டிரைடன் உலகம் நீ ஒய்வெடுத்துக்கொண்டு ஒதுங்குவதற்காக வருந்தும்வரை ஒதுங்க நினைக்காதே. செருக்கினாலோ, கோழைத்தனத்தாலோ, சோம்பலினாலோ ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டிருக்கும் மனிதன், அங்கே வெறுமே உட்கார்ந்து, உறுமிக்கொண்டிருப்பதை நான் வெறுக்கிறேன். நான் செய்வதைப் போல வெளியே வரட்டும். வந்து குரைக்கட்டும். அ. ஜான்ஸன் {5L60)|D >'r தொலைவிலே மங்கலாகத் தெரிவதைக் காண்பது" நம் கடமையன்று, நம் கண் முன்பு உள்ளதைச் செய்வதே நம் மேலான கடமை. அ கார்லைல் நமது வாழ்க்கை பெருங்கடமைகளுக்காக அளிக்கப் பெற்றுள்ளது. சுயநலத்திற்காக அன்று: குறிக்கோழிலாத கனவுகளில் வீணாகக் கழிப்பதற்காக அன்று நீம்மை அபிவிருத்தி செய்துகொண்டு, மனித சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காக. அ ஆப்ரே டி. வீர்