பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி 3: 165 கேலி செய்வதில், செய்தவனே முதலில் சிரிக்கும்படி ஏற்பட்டால், அதன் முக்கியம் போய்விடும். அ வில்லர் சாதாரணமாக ஒரு முறை கேலி பேசுவது நல்லது. ஆனால், கேலியைத் தொழிலாக வைத்துக்கொள்ளக்கூடாது. அ ஃபுல்லர் கேலியைக் கண்டு பயப்பட வேண்டாம் உன்மீது ஒருவன் உப்பை அள்ளிப் போட்டால், உன்மீது புண்கள் இருந்தா லன்றி, உனக்கு ஒரு தீங்கும் நேராது. அ ஜூனியஸ் வேடிக்கைப் பேச்சால் அடிக்கடி ஒரு நண்பனை இழக்க நேரும். ஆனால், அது பகைவனை உண்டாக்காது. அ ஷ எலிம்மன்ஸ் கேலியின் பெருமை கேட்பவரின் செவியைப் பொறுத்தது. ஒரு போதும் சொல்பவர் நாவில்லை. அ ஷேக்ஸ்பியர் சிரித்து முடிந்த பிறகு கேலிப் பேச்சை மதிப்பிடு. அ டபுள்யு, லாயிட் கேலி பேசுவதில் எச்சரிக்கையாயிருக்கவும் கேலியால் பலர் பெரு நஷ்டமடைந்துள்ளனர். கேவலம் கேவலம் தண்டனையிலில்லை; ஆனால், குற்றத்திலிருக்கிறது. அ அல்ஃபியெரி நம் இயற்கையில் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. பிறரால் வரும் சிறு கேவலங்களை நாம் மிகப் பெரியவையாகக் கருதி வருந்துவோம். ஆனால், நாமாகவே பெரிய கேவலங்களை உண்டாக்கிக்கொண்டு. அலட்சியமாக இருப்போம். நம் முரண்பாடுகளுள் இதைப் போல் பெரியதைக் காண்டது அரிது.