பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

சந்தேகம்

  • நாம் கொஞ்சம் அறிந்திருந்தால், தெளிவாகக் கண்டு

கொள்வோம்; அறிவு மிகுந்தால் சந்தேகமும் அதிகமாகிவிடும். ് &n

  • சந்தேகமே கொள்ளாதவன் அரை நம்பிக்கைகூட இல்லாதவன், சந்தேகமுள்ள இடத்தில் உண்மையும் இருக்கும். அது உண்மையின் சாயல். A பெய்லி
  • ஆராய்ச்சிக்கு முன்வாயிலைத் திறக்காவிட்டால் சந்தேகம் சாளரத்தின் வழியாக வரும். ைஜோபெட்
  • சந்தேகம் தீர்ந்தால் ஓய்வு ஆரம்பமாகும். - டெட்ராக்
  • மானிட ஆன்மாவின் சந்தேகம் நரகமாகும். அ. காஸ்பரின்

சமத்துவம்

  • இறைவனின் சட்டப்படி - அவன் மனித சமூகத்திற்கு அளித் துள்ள அந்தச் சட்டத்தின்படி - எல்லா மனிதர்களும் சுதந்தர மானவர்கள், சகோதரர்கள், சமத்துவமானவர்கள். மாஜினி

- பூமியில் தோன்றியதும், ஒவ்வொருவருக்கும் சமத்துவம் உண்டு. பூமிக்கடியில் போகும் பொழுதும் சமத்துவம் உண்டு.

ைஎன்கிளாஸ்
  • சமூகம் நாம் கருதுவதைவிட அதிகச் சமநிலை உள்ளது. மகா அறிவாளிகளும். ஒன்றும் தெரியாத மூடர்களும் அபூர்வம்: பெரிய அசுரர்களோ, குள்ளர்களோ அபூர்வமாகவே இருப்பர்.

க ஹாஸ்விட்

  • இயற்கையில் எல்லா மனிதர்களும் சமத்துவமாக உள்ளவர்கள்.

எல்லோரும் ஒரே மண்ணால், ஒரே கடவுளால் படைக்கப்