பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ւյ. 7wrtքch) նւյ7Աի՝ ::: 175 = பெற்றவர்கள். நாம் நம்மை எவ்வளவுதான் ஏமாற்றிக் கொண்டாலும், கடவுளுக்கு வல்லமையுள்ள அரசன் எவ்வளவு வேண்டியவனோ அவ்வளவு வேண்டியவன் ஏழைக் குடியானவனும் ைபிளேட்டோ சமய போதனைகள் உபதேசம் செய்வது எளிது. ஆனால், நன்றாக உபதேசிப்பது மிகவும் கஷ்டம். அ எம்ன்மஸ் ஆன்மாவிலிருந்து வெளிவரும் உபதேசமே ஆன்மாவைக் கவர்ச்சி செய்யும். அ ஃபுல்லர் அவர் செருக்குள்ளவர்களை அடங்கச் செய்தார். பாவங் களுக்காக வருந்துபவர்களை உற்சாகப்படுத்தினார்: குற்றம் செய்யும் செல்வர்களை அஞ்சாது கண்டித்தார். அவர் நிறைய உபதேசம் செய்தார். ஆனால். உபதேசத்தைவிட அவர் வாழ்க்கையே அவர் போதித்த உண்மைகளுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிற்று. அ டிரைடன் சமயமும் நம்பிக்கையும் கடவுளை நேசி அவர் உன்னுள் தங்கியிருப்பார். கடவுளுக்குப் பணிந்து நட, அவர் தமது ஆழ்ந்த போதனைகளை உனக்குப் புலப்படுத்துவார். - ராபர்ட்ஸன் கடவுளும் சமயமும் இல்லாவிட்டால், மனிதரின் வாழ்க்கை பயனற்றதாகும் வாழ்க்கையில் எவ்வித உயர்ந்த நோக்கமும் இல்லாமற்போகும். - அ டில்லோட்ஸன் உண்மையான சமயம் நம்முடைய நடத்தையில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்புற்றிருக்கும்; ஒரு பச்சை மரத்தில் ஜீவாதாரமான சிறு வெகு தொலைவிலுள்ள கிளைகளுக்கும் செல்வது போல் அதுவும் பரவி நிற்கும்.