பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் சார்ந்து வாழ்தல்

  • மனித சமூகம் எப்பொழுதுமே சார்ந்து வாழவே வேண்டியிருக்கிறது. இரக்கமும் தயவும் மற்ற குணங்களைவிட . அதிகமாகத் தேவைப்படுகின்றன. க. தாக்கரே
  • மனிதன் எவ்வளவு உயர்ந்த அறிவைப் பெற்றிருந்த போதிலும், ஒவ்வொரு மணி நேரத்திலும் அவனுக்குப் பிறர் உதவி யில்லாமல் முடியாது. ஜான்ஸன் * தனித்து இயங்கக்கூடிய முறையில் கடவுள் எவனையும் படைக்கவில்லை. அ ஃபெல்ட்ஹாம்

சிக்கனம்

  • சிக்கனந்தானே பெரிய வருமானமாகும். - வெனிகா
  • பெரிய தொழில்கள் சிலரைச் செல்வராக்கும்; ஆனால், பெரும்பாலோர் கவனத்தினாலும் சிக்கனத்தினாலுமே செழிப்படைகின்றனர். க. டிடிமுங்கெர்
  • ஒரு மனிதனுடைய சாதாரணச் செலவுகள் அவனுடைய வருவாயில் பாதியளவு மட்டும் இருக்க வேண்டும். அவன் செல்வனாக விளங்க வேண்டுமானால், மூன்றில் ஒரு பகுதியே செலவழிக்க வேண்டும். அ பேக்கன்
  • கையில் மிஞ்சியதைப் பாதுகாத்து வைத்துக்கொள்வதைப் போன்ற ஆதாயம் வேறில்லை. க. பப்ளியஸ் ஸ்ைரஸ்
  • தேவையில்லாமல் கூடுதலாக வாங்கும் பொருள் எதுவும் மலிவன்று. ஓரணா ஆனாலும் அது கிராக்கிதான். க. புளுடார்க்
  • சேமித்தலே ஒரு கல்வியாகும்; மற்ற நற்குண்ங்களை அது

போற்றி வளர்க்கின்றது. அது தன்னலமறுப்பைக் கற்பிக்கின்றது.