பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

- நிலையில் அவர்கள் ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்பர் நடு வயதிலுள்ளவர்களை அவர்கள் வீரச் செயல்கள் புரியும்படி துண்டுகிறார்கள். அ அரிஸ்டாட்டல் மூன்று நண்பர்கள் இருந்து, அவர்களை இழந்தவனுக்கு நீ நான்காவது நண்பனாகச் சேர வேண்டாம். உ லவேட்டர் வாழ்க்கைப் பாதையில் சென்றுகொண்டிருக்கையில் ஒரு மனிதன் புதிய நண்பர்களைப் பெறாவிட்டால், அவன் விரைவிலேயே தனியாக விடப்படுவான். அ எபான்பைன் முன் கவனமுள்ள ஒரு நண்பனைப்போல வாழ்க்கையில் வேறு பாக்கியமில்லை. அ யூரிபிடிஸ் ஆடவன் பெண்ணிடம் கொள்ளும் காதல் சாதாரணமானது. இயல்பானது. ஆரம்பத்தில் அது உணர்ச்சியால் ஏற்படுவது. ஒருவன் தானாகத் தேர்ந்து ஏற்படுத்திக்கொள்வதன்று. ஆனால் மனிதனுக்கு மனிதன் அமைத்துக்கொள்ளும் உண்மையான நட்பு எல்லையற்றது. நித்தியமானது. அ பிளேட்டோ செல்வ நிலையைப் பார்க்கினும் வறுமையிலுள்ள நண்பனிடம் குறித்த நேரம் தவறாமல் நீ செல்லவேண்டும். அ. கிலோ நட்பு, மாலை நிழல் அது வாழ்க்கைக் கதிரவன் அஸ்தமிக்கும் பொழுது வலிமையடையும். அ லாக்பான்டெயின் பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே நீ கொடுப்பது நின்றால், அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்றுவிடுவர். ஃபுல்லர் گeر வாழ்க்கை பல நட்புறவுகளாகிய கோட்டைகளால் பாதுகாப்புப் பெற வேண்டும். அன்பு கொள்வதும், அன்பு பெறுவதும் வாழ்க்கையில் முதன்மையான இன்பங்கள். ஸிட்னி ஸ்மித்