பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II. øawavamado to 255 நூலாசிரியன் என்பதைவிட நான் என்னைப் பத்திரிகையாளன் என்றே சொல்லிக்கொள்ள விரும்புவேன். ஏனெனில், பத்திரிகையாளன் தொழிலைக் கற்றுக்கொண்டே பிழைப்பையும் நடத்துபவன். - ைஜி. கே. செஸ்டர்டன் பத்திரிகையை அப்புறப்படுத்திவிட்டால், நமது நாடு குழப்பமாகி விடும். அ ஹாரிசான்ட்லர் வாரந்தோறும் எழுதுதல், தினந்தோறும் எழுதுதல், சுருக்கமாக எழுதுதல், ரயில்களைப் பிடிப்பதற்கு அவசரமாக ஓடுபவர் களுக்காகச் சுருக்கமாக எழுதுதல் அல்லது மாலை நேரங்களில் களைத்து வீடு திரும்புகிறவர்களுக்காக எழுதுதல் ஆகியவை எழுத்தின் தராதரம் தெரிந்தவர்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாகும். டீ விர்ஜீனியா உல்ஃப் ஆயிரம் துப்பாக்கிச் சனியன்களைக்காட்டிலும், மூன்று பத்திரிகைகளைக் கண்டு நான் அஞ்சுகிறேன். நெப்போலியன் நாம் மனிதர்களும் பத்திரிகைகளும் நடத்தும் ஆட்சியின்கீழ் வாழ்கிறோம். ைவெண்டல்.:பிலிப்ஸ் பயிற்சி அறிவுப் பயிற்சியின் முதன்மையான நோக்கம் மனிதனுக்கு நிறைந்த அறிவையளிப்பதும், அவன் மனத்தைப் பூரணமாக அடக்கிக்கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதுமாகும். க நோவாலிஸ் அரைகுறைப் பயிற்சி ஆடம்பரத்தை உண்டாக்கும்: தீவிரப் பயிற்சி எளிய வாழ்வை உண்டாக்கும். .க போவி சாதாரண அறிவுள்ள ஒரு மனிதன் பயிற்சியினாலும் கவனத்தி னாலும் உழைப்பினாலும் தான் விரும்புவது போன்ற எந்த