υ, πατιρcήνον/τιβ' 4: 263 காலம் புனிதமாக்குகின்றது. நெடுங்காலத்திற்கு முந்திய விஷயம் சமயமாகிவிடுகின்றது. வல்ெலர் பழமொழிகள் பழமொழியைப்போல் மனத்தில் பாய்ந்து பதியக்கூடியது வேறு எதுவும் இல்லை. ா , முர்ரே மணலில் முத்துகளைப் போலவும், சுரங்கத்தில் தங்கத்தைப் போலவும், சரித்திரத்தில் பழமொழிகள் இருக்கின்றன. r rrாஸ்மஸ் இந்த ஆச்சரியமான வாக்கியங்களுக்குப் பின்னால் மறைந்து நிற்கும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு. பின்னால் தத்துவ ஞானிகள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். ா புளுடார்க் அனுபவம் விஞ்ஞானங்களுக்கு எல்லாம் தாய் பழமொழிகள் அந்த அனுபவத்திலிருந்து பெறப்பட்டவை. பழமொழிகளில் உண்மையாக இல்லாதவை மிகச் சிலவே இருக்கும். . செர்வான்டிஸ் நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சிறுவாக்கியங்கள் பழமொழிகள். ா செர்வான்டிஸ் பழமொழி பலருடைய ஞானத்தைப் பெற்று ஒருவருடைய புத்தி நுட்பத்தால் அமைந்தது. . ஜே. ரஸ்ஸல் அறிவு புகட்டும் ஒரு வாக்கியத்தையோ, சொற்றொடரையோ கேள்விப்பட்டால், அதை நினைவில் வைத்துக்கொள். அ எபர் ஹென்றி ஸிட்னி எல்லா வகையிலும் உண்மையாயிருக்கும் பழமொழிகள் மிகச் சிலவே. க வாவனார்கூஸ்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/248
Appearance